அனுமன் கண்டேன் தேவி என சொன்ன இடம்- கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கண்டதேவி என்ற சிற்றூர். இங்கு சொர்ணமூர்த்தீஸ்வர் கோவில் உள்ளது. சொர்ண மூர்த்தீஸ்வராக சிவன் அருள் பாலிக்கிறார். சீதையை இராவணன் தூக்கி சென்றபோது ஜடாயு என்ற பறவை வந்து தடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன ஜடாயு ராவணனை தடுத்தபோது ராவணன் ஜடாயுவை வெட்டினானாம் அப்போது அதன் இறகுகள் வந்து விழுந்த இறகு சேரி என அழைக்கப்படுகிறது. அந்த இறகுசேரி கண்டதேவிக்கு மிக அருகில் உள்ளது.

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வர் கோவிலில் ஜடாயு நினைவாக  ஸ்தூல லிங்க பீடத்தில் திருவடியும் அதன் அருகே நாவல் மரமும் உள்ளன.

சீதையை கண்டு வர அனுமனை இலங்கை அனுப்பிய இராமன் இங்கு தங்கி இங்குள்ள சொர்ணமூர்த்தீஸ்வரரை வழிபட்டார். இலங்கை சென்று சீதையை கண்டு திரும்பிய அனுமன் இங்கிருந்த ராமனை பார்த்து கண்டேன் தேவியை என கூறினாராம் அதனால் இந்த ஊர் பெயர் கண்டதேவி என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீராமபிரான், ஜடாயு பறவை இங்குள்ள சிவனை வழிபட்டுள்ளனர். ஜடாயு ராவணால் வெட்டுப்பட்டு இறந்த உடன் ராமபிரான் இங்குள்ள சொர்ண மூர்த்தீஸ்வரரை வழிபட்டு ராமபிரான் நீத்தார் கடன் செய்துள்ளார்.

அதனால் இந்த ஸ்தலம் நீத்தார் கடன் போக்கும் ஸ்தலமாகவும் உள்ளது.

Published by
Staff

Recent Posts