இந்திய அளவில் பிரபலமான டாப் 10 எக்ஸ் தள ஹேஷ்டாக்குகளில் இடம் பெற்ற ஒரே நடிகரின் பெயர்…யார் அவர்…

நடிகர் பிரபாஸ் தெலுங்கு முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஆவார். 2002 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவரான பிரபாஸ் போர்ப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மேலும் ஏழு பிலிம்பேர் விருதுகள்,நந்தி விருது, சைமா விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். இவரை ‘ரெபெல் ஸ்டார்’ என்று ஊடகங்கள் அழைக்கின்றன.

நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி -1’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலாம் பான் இந்தியா நடிகரானார். அந்த நேரத்தில் பாகுபலி அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அதில் ராஜாவாகவும், இளவரசனாகவும் நடித்திருந்த பிரபாஸிற்கு அத்தோற்றம் கச்சிதமாக பொருந்தியது.
இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை அனுஷ்கா இவருக்கு இணையாக நடித்தார். இவர்களது ஜோடிப் பொருத்தம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. பாகுபலி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த நிலையில் ,இந்திய அளவில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டாக்குகளை எக்ஸ் தளம் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அந்த டாப் 10 ஹேஷ்டாக்குகளில் ஒரே ஒரு நடிகரின் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது. அது வேற யாரும் அல்ல, நடிகர் பிரபாஸ் தான்.இதற்குக் முக்கியக் காரணம் இவரின் பாகுபலி திரைப்படம் என்று சொல்லலாம்.

எக்ஸ் தளத்தின் சிறந்த ஹேஷ்டாக்குகளின் பட்டியலில் நடிகர் பிரபாஸின் பெயர் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில #newprofiepic, இரண்டாம் இடத்தில் #crypto, மூன்றாம் இடத்தில் நடிகர் விஜயின் #leo, நான்காம் இடத்தில #nft, ஐந்தாம் இடத்தில் #jawan, ஆறாம் இடத்தில #pathan, ஏழாவது இடத்தில் #prabhas பெயர் உள்ளது. மேலும் நடிகர் பிரபாஸ் நடித்த #adhipurush ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை அறிந்த நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். தற்போது நடிகர் பிரபாஸ் ‘கல்கி 2898 AD’ மற்றும் ‘ராஜா ஸாப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...