தவறு செய்த எம்.ஜி.ஆர். நண்பர்.. தவறை உணரவைத்து மீண்டும் தூக்கிவிட்ட பொன்மனச் செம்மல்!

தமிழ் சினிமாவில் 1965 காலகட்டங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜியை வைத்து ஹிட் படங்களைக் கொடுத்தவர் தான் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி. சரவணா பிலிம்ஸ் என்ற பெயரில் ஜி.என். வேலுமணி பாகப் பிரிவினை, பாலும் பலமும், படகோட்டி, குடியிருந்த கோயில், நான் ஏன் பிறந்தேன், சந்திரோதயம் உள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்தார். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் விளங்கினார் ஜி.என்.வேலுமணி.

இவர் தயாரிப்பில் 1968-ஆம் ஆண்டு வெளியான படம் தான் குடியிருந்தகோவில். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராஜஸ்ரீ, நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் அறிவிப்பு வந்தபொழுதே பல விநியோகஸ்தர்கள் அட்வான்ஸ் கொடுத்து வைத்து விட்டனர். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பளார் ஜி.என்.வேலுமணியின் உதவியாளர் குடியிருந்த கோவில் படத்திற்காக மேலும் ரூ. 5000 பணம் கொடுத்தால்தான் விநியோகம் செய்ய முடியும் என்று கூற, தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அப்போது அவர் ஊரில் இல்லாததால் விஷயம் எம்.ஜி.ஆர் வரை சென்றுள்ளது.

அப்போது எம்.ஜி.ஆர் விநியோகஸ்தர்களிடம் நீங்கள் அவர்கள் கூறியது போல் 5,000 அதிகம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். படம் மிகப்பெரிய லாபம் தரும். அப்படி லாபம் கிடைக்கவில்லை என்றால் அதற்குரிய நஷ்டப் பணத்தினை நான் தருகிறேன் என்று விநியோகஸ்தர்களுக்கு உறுதி கொடுத்திருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் வாக்கினை நம்பி படத்தினை வாங்கியவர்கள் அவர் சொன்னது போலவே படம் நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கிறது.

AK 63-ல் அஜீத் கதாபாத்திரம் எப்படி? வெளியான ரகசிய தகவல்
படம் நன்றாக ஓடிக் கொண்டிருந்த வேளையில் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி எம்.ஜி.ஆரிடம் பேசியுள்ளார். அப்போது எம்.ஜி.ஆர்., ஜி.என்.வேலுமணியிடம் ஏன் 5000 அதிகமாக வாங்கச் சொன்னீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் கடைசியில் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகிவிட்டது என்று கூறி, அதை அடுத்த படத்தில் சரிசெய்து கொள்ளலாம். கதை தயார் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் எம்.ஜி.ஆர்., வேலுமணியிடம் நீங்கள் வாக்குத் தவறிவிட்டீர்கள் இனி எனக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லைஎன்று கூற அவர்கள் நட்பு பிரிந்தது.

மேலும் சிவாஜியிடமும் பிரிந்து வந்த வேலுமணி அதன்பின் முத்துராமனை வைத்து நம்ம வீட்டு தெய்வம் என்ற படத்தினை வெளியிட்டார். ஆனால் படம் சுமாரான வெற்றியையே பெற்றது. அடுத்த படமான அன்னை அபிராமி தோல்வியைத் தழுவ கடனில் மூழ்கினார் வேலுமணி.
அப்போது கதாசிரியர் ஒருவர் வேலுமணிக்காக எம்.ஜி.ஆரிடம் பேசியுள்ளார். வேலுமணியின் நிலையை அறிந்த எம்.ஜி.ஆர் தன்னைச் சந்திக்க வரும்படி கூறியிருக்கிறார்.

பின் வேலுமணி தன் தவறை உணர்ந்து எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்க, அதன்பிறகு இவர்கள் கூட்டணியில் நான் ஏன் பிறந்தேன் என்ற படம் உருவாகி மாபெரும் வெற்றி வெற்றது. இவ்வாறு தனக்கு துரோகம் இழைத்தவர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்து அவர்களை வாழவைத்துப் பார்த்தவர் தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

Published by
John

Recent Posts