விண்ணப்ப மனு மூலம் நம் கடன் தீர்க்கும் அக்னிபைரவர்

விண்ணப்ப மனு மூலமாக நம்முடைய கடன்களை தீர்க்கும் தாருகாபுரம் ஸ்ரீ அக்னி பைரவர்!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் வாசுதேவநல்லூர் என்ற ஊர் அமைந்திருக்கிறது.

வாசுதேவ நல்லூருக்கும் புளியங்குடி க்கும் நடுவில் பிரதான சாலையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருப்பது தாருகாபுரம் ஆகும்.

இங்கே இருக்கும் அருள்மிகு மத்தியஸ்த நாதர் திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீஅக்னி பைரவர் அருளாட்சி புரிந்து கொண்டிருக்கிறார். இந்த ஆலயம் தட்சிண பஞ்சபூதத் தலங்களில் நீர் தலமாக போற்றப்படுகிறது.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி அன்றும் இங்கே நிறைய கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் மனு எழுதித் தருகிறார்கள்.

அனுப்புனர் முகவரியில் தன்னுடைய முகவரியையும்,

பெறுநர் முகவரியில் அருள்மிகு அக்னி பைரவர், அருள்மிகு மத்தியஸ்த நாதர் திருக்கோயில், தாருகாபுரம் என்று எழுதி

பொருள் :-கடன் தீர்ப்பது தொடர்பாக என்று குறிப்பிட்டு,

ஐயா வணக்கம்,

கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு படிப்படியாக கடன் உருவாகி இப்பொழுது ரூபாய் ஒரு கோடி கடன் வந்துவிட்டது. நானும் என் குடும்பத்தாரும் சம்பாதிக்கும் வருமானம் வட்டி கொடுப்பதற்கே போதவில்லை. அருள்மிகு ஸ்ரீ அக்னி பைரவர் ஆகிய தாங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் என்னுடைய கடன் அனைத்தும் முழுமையாக தீர அருள்புரியும் பாடி தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு எனது பெயர்

கோயில் பூசாரியிடம் முறைப்படி இந்த மனுவை ஒப்படைக்க வேண்டும்.

கண்டிப்பாக தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு வருடத்திற்குள் கடன் தீர்ந்த பிறகு மறக்காமல் நேரில் வந்து ஸ்ரீ அக்னி பைரவர் பெருமானுக்கும், அருள்மிகு மத்தியஸ்த நாதர் பெருமானுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து அன்னதானம் செய்ய வேண்டும்.

பல நூற்றாண்டுகளாக இந்த அருள்மிகு மத்தியஸ்த நாதர் ஆலயத்தில் கடன் தீர இவ்வாறு மனு எழுதித்தரும் பழக்கம் இருக்கிறது.

மனு எழுதி வேண்டியவர்கள் அனைவருக்கும் கடன்கள் வெகு சீக்கிரம் தீர்ந்து இருக்கின்றன.

Published by
Staff

Recent Posts