நடிகர் திலகம் பட்டம் எப்போது யார் கொடுத்தது தெரியுமா? டைட்டில் கார்டில் போட்ட முதல் படம் இதுவா?

சினிமாத் துறை என்றாலே தனக்குப் பிடித்த ஆஸ்தான நடிகருக்கு ரசிகன் பட்டம் வழங்கி அந்த அடைமொழியில் அவரை அழைத்து மகிழ்வது வழக்கம். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பைரவி படத்தில் முதல் முதலாக போடப்பட்டது.  அதேபோல் கமலுக்கு முதலில் காதல் இளவரசன், பின்இப்போது உலக நாயகன், விஜய்க்கு இளைய தளபதி, இப்போது தளபதி, அஜீத்துக்கு எந்தப் பட்டமும் வேண்டாம் என்னை ஏ.கே என்று அழையுங்கள் என்று கூறினாலும் ரசிகர்கள் இன்னமும் தீனா படத்தில் இடம்பெற்ற ‘தல‘ என்ற அடைமொழி பட்டத்தைக் கொடுத்துக் கொண்டாடுகின்றனர்.

இப்படி ஒவ்வொரு நடிகருக்கும் பட்டங்கள் வழங்கி அழைக்கும் வேளையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பட்டம் வழங்கியது ஒரு ரசிகன் தான். மேலும் இவரது இயற்பெயரான கணேசன் என்பதே இருந்த நிலையில், சத்ரபதி சிவாஜி வரலாற்று நாடகத்தில் சிவாஜியாக நடித்து தன் திறமையை நிரூபித்தமையால் இவருக்கே சிவாஜி கணேசன் என்று பெயர் வந்தது.

நடிகர் திலகத்தின் அத்தனை திறமைகளையும் வெளிக் கொண்டுவந்த இயக்குநர்.. அவரின் அசைவைக் கூட விட்டுவைக்காத இயக்குநர் மாதவன்

அதன்பின் நாடகத் ததுறையில் இருந்து சினிமாவிற்கு வந்த போதும் சிவாஜி கணேசன் என்றே டைட்டில் கார்டில்  போடப்பட்டது. அப்போது இவரின் நடிப்புல் தீவிர பற்று கொண்ட ரசிகர் ஒருவர் பேசும் படம் என்ற சினிமா இதழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று அழைக்குமாறு கோரிக்கை விடுக்க அந்தப் பெயரே நிலைத்து விட்டது.

ஆனால் முதன்முதலாக 1957ம் ஆண்டு வெளிவந்த அம்பிகாபதி திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு ‘நடிகர் திலகம்‘ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அது முதல் அடுத்து வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் இந்த முறையே பின்பற்றப்பட்டது. இதே போல் சாவித்திரிக்கும் நடிகையர் திலகம் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

மேலும் எம்.ஜி.ஆருக்கோ பல படங்களில் புரட்சியாக நடித்ததால் புரட்சித் தலைவர் என்ற பெயர் நிலைக்க அவரின் அடுத்தடுத்த செயல்பாடுகளால் மக்கள் அவரை பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், இதய தெய்வம் என்று அழைக்க ஆரம்பித்தனர். அதேபோல் புரட்சித் தலைவி என்ற பெயரும் ஜெயலலிதாவிற்கு நிலைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இன்று இவர்கள் பெயர்களை உச்சரிப்பதைக் காட்டிலும் அடைமொழி கொடுத்தே அழைப்பது வழக்கமாகி விட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews