சிவாஜியின் நவராத்திரி படத்தை வைத்து தான் எம்.ஜி.ஆருக்கு நவரத்தினம் படம் எடுத்த இயக்குனர்..

அந்த காலத்தில் புராணப் படங்கள் படங்கள் என்று சொன்னாலே அதற்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர் ஏ பி நாகராஜன் தான். அவர் இயக்கிய பல புராணப் படங்களும் மிகப் பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. அதற்கு சான்றாக சொல்லப்போனால் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை ஆகிய திரைப்படங்கள். இந்த படங்கள் எல்லாமே நடிகர் சிவாஜி நடித்த திரைப்படங்கள்.

அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள். இதே நேரத்தில் சிவாஜியின் நூறாவது திரைப்படமான நவராத்திரி திரைப்படத்தையும் ஏ பி நாகராஜன் தான் இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கிட்டத்தட்ட ஒன்பது கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.

இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி வைத்து பல படங்கள் இயக்கிய ஏ பி நாகராஜனுக்கு எம்.ஜி.ஆர் வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என ஆசை வந்துள்ளது. அதுவும் கிட்டத்தட்ட நவராத்திரி திரைப்படம் போல தான் எம்.ஜி.ஆருக்கும் திரைப்படம் அமைய வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அப்படி ஆசை பட்டு எம்.ஜி.ஆர் வைத்து எடுத்த திரைப்படம் தான் நவரத்தினம்.

அதாவது நவராத்திரி படத்தின் நாயகி சாவித்திரி,சிவாஜி அவர்களை காதலிப்பார். ஆனால் சாவித்திரி அவங்களுடைய வீட்டில் வேற ஒரு மாப்பிள்ளை பார்க்க அதனால் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான நபரை சந்திப்பார் சாவித்திரி.

அவர் சந்திக்கக்கூடிய எட்டு நபர்களும் சிவாஜி தான். சாவித்திரியுடைய காதலோடு சேர்த்து மொத்தம் 9 சிவாஜி இந்த படத்தில் நடித்திருப்பார்கள். அதன் பிறகு 9 நாள் முடிந்த பின் சாவித்திரி மீண்டும் வீட்டுக்கு வந்தபோது தான் அவங்களுக்கு பார்த்த மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை அவர்களுடைய காதலர் தான், என்பது தெரிய வரும்.

சாவித்திரி மகிழ்ச்சியுடன் திருமணத்துக்கு சம்மதிப்பார்கள். இந்த திருமணத்திற்கு சாவித்திரி சந்தித்து எட்டு கேரக்டரில் மொத்தம் ஏழு பேர் வந்திருப்பார்கள். ஒரு கேரக்டர் சாவித்திரி முன்பாக இறந்து விடுவார்கள். இப்படித்தான் அந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். அதனால் இந்த படத்தின் கடைசி கிளைமாக்ஸ் காட்சிகளை ஒரே ஷாட்டில் எட்டு விதமான சிவாஜி ஒன்றாக இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த படம் மாபெரும் வெற்றியையும் வசூல் சாதனையும் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏ பி நாகராஜன் நினைத்தது என்ன நவராத்திரி திரைப்படமும் எம்.ஜி.ஆரின் நவரத்தினம் திரைப்படமும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது தான்.

இப்போது எம்.ஜி.ஆரின் நவரத்தினம் திரைப்படத்தின் கதைக்களமும், நவராத்திரி படத்தில் சாவித்திரி எப்படி வீட்டை விட்டு வெளியேறுவார்களோ அதே மாதிரி நவரத்தினம் திரைப்படத்தை எம்ஜிஆர் வீட்டில் இருந்து வெளியேறி விடுவார். நவராத்திரி படத்தில் சாவித்திரி ஒன்பது குணம் கொண்ட ஆண்களை சந்திப்பார், அதே போல எம்ஜிஆர் 9 குணங்கள் உள்ள பெண்களை சந்திப்பார்.

எம்.ஜி.ஆரும் கவுண்டமணியும் இணைந்து படத்தில் நடித்துள்ளார்களா? அதுவும் எத்தனை படங்கள் தெரியுமா..

அந்த ஒன்பது பெண்களும் ஒரே நடிகை கிடையாது வெவ்வேறு நடிகைகள் தான், படத்தில் லதா, ஸ்ரீபிரியா, ஜெயசந்த்ரா,ஒய் விஜயா ஆகிய இன்னும் ஒரு சில நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியாகி இந்த படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்திற்கு பின் உடல் நல குறைவால் ஏ பி நாகராஜன் காலமானார். இந்த படம் தான் அவருடைய கடைசி திரைப்படம்.

இதில் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய விசயம் நவரத்தினம் திரைப்படமும் நவராத்திரி திரைப்படமும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று ஏ பி நாகராஜன் ஆசைப்பட்டார். ஆனால் நவராத்திரி படத்தில் சிவாஜி 9 கதாபாத்திரத்தில் நடித்தது போல நவரத்தினம் படத்தில் எம்.ஜி.ஆர் 9 கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை. அதற்கு பதிலாக 9 கதாநாயகிகள் இடம் பிடித்துள்ளனர் என்பது தான். ஆனால் இந்த 2 படமும் ஏ பி நாகராஜனுக்கு நால்ல வெற்றியை கொடுத்து வசூலையும் பெற்று தந்தது. எம்.ஜி.ஆர் வைத்து படம் இயக்க வேண்டும் என்ற கனவும் நினைவானது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews