ஒரேயடியாக தள்ளிப்போன தங்கலான் ரிலீஸ்!.. சியான் விக்ரம் படம் எப்போ வருது தெரியுமா?..

பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வித்தியாசமாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அஜித்குமாரின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா போன்ற படங்கள் இந்த ஆண்டுக்கு தள்ளிப்போன நிலையில் இந்த ஜனவரி மாதம் தங்கலான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு பல படங்கள் போட்டியிடும் நிலையில், குடியரசு தினத்தை குறிவைத்து தங்கலான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஜனவரி மாதத்தில் சியான் விக்ரம் படம் வெளியாக வாய்ப்பே இல்லை என தெரிவிக்கப்பட்டது.

GD4usTJWAAA u1c

தங்கலான் ரிலீஸ் எப்போ?:

கோலார் தங்க வயலை மையமாக வைத்து அங்கே உள்ள தங்கத்தை சுரண்ட ஆங்கிலேயர்கள் முயற்சி செய்ததும் அவர்களை எதிர்த்து பழங்குடியின மக்கள் நடத்திய போராட்ட கதையாகவே இந்த தங்கலான் திரைப்படம் உருவாகியுள்ளது.

ஜனவரி மாதத்தில் வெளியாகாத நிலையில், லால் சலாம் திரைப்படத்தைப் போல பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என சியான் விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், ரசிகர்களை சற்றே சோகத்தில் ஆழ்த்தும் விதமாக தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தற்போது பொங்கலை முன்னிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

சம்மர் போட்டி:

ஏற்கனவே இந்த ஆண்டு சம்மருக்கு ரஜினிகாந்தின் வேட்டையன், கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட பல படங்கள் வரிசை கட்டி ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அந்த படங்களுக்கு போட்டியாக சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படமும் வெளியாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் படத்திற்காக சியான் விக்ரம் தனது உடலையும் உயிரையும் கொடுத்து நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் விக்ரமுக்கு வசனமே இல்லை என்றும் ராவான ஆக்‌ஷன் காட்சிகளால் மட்டுமே அவர் தெறிக்கவிடப் போகிறார் என்றும் ஆஸ்கர் வரை படத்திற்கு அனுப்புவோம் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

இந்நிலையில், அந்த நம்பிக்கையுடன் தான் பெரிய படங்களுடன் தங்கலான் படத்தையும் மோத விட ரெடியாகி விட்டனர் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.