மகன் விஜய்க்காக அம்மா ஷோபா இத்தனை பாட்டு பாடியிருக்காரா?.. தாயுடன் தளபதி பாடிய ஹிட் பாடல்கள்!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை அவரது தந்தை குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடிக்க வைத்தாலும், ஹீரோவாக முதன் முதலில் அறிமுகப்படுத்திய படம் தான் நாளைய தீர்ப்பு. தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஆரம்ப காலகட்டங்களில் தொடர்ந்து நடித்து வந்த இயக்குநர் விக்ரமனின் பூவே உனக்காக படம் அவரது சினிமா வாழ்க்கையே மாறியது. பூவே உனக்காக படத்தின் இமாலய வெற்றி அவருக்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தினைக் கொடுத்தது.

அவரின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கைக்கு தந்தை சந்திரசேகர் எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்தாரோ அதே அளவிற்கு தாயும் தளபதி விஜய்யின் சினிமா வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்துள்ளார். அடிப்படையில் கர்நாடக சங்கீத பாடகியான விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர், விஜய் சிறுவனாக இருக்கும் போதே அவருக்கும் அடிப்படை சங்கீதத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். இதனால் இயல்பாகவே இசை ஞானம் கொண்ட தளபதி விஜய் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலையாவது பாடி விடுவது வழக்கம்.

இப்படி விஜய் நடித்த பல பாடல்கள் ஹிட் பாடல்களாக ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி ஒட்டு குடும்பமே கலைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் தளபதி விஜய் தனது தாயுடன் சேர்ந்து ஒரு பாட்டைப் பாடியிருக்கிறார். மேலும் அம்மா ஷோபா சந்திரசேகரும் மகனுக்காக சில பாடல்கைளைப் பாடியுள்ளார்.

சின்னப்ப தேவரின் கடன்தொல்லையைத் தீர்த்து வைத்த முருகன்..! இது எப்படி நடந்தது தெரியுமா?

விஜயின் அதிரடி நடிப்பிலும், இயக்குனர் பேரரசுவின் அக்மார்க் இயக்கத்திலும் வெளியான படம் சிவகாசி. இந்தப்படத்தில் தளபதி விஜய்க்காக நயன்தாரா தோன்றும் ஒரு குத்துப்பாடலான கோடம்பாக்கம் ஏரியா பாடலை ஷோபா சந்திரசேகர் பாடியிருப்பார். இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஸ்ரீகாந்த் தேவா. இந்தப் பாடல் அப்போது பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. அதே போல் விஜயின் ஆரம்ப கால படமான விஷ்ணு படத்தில் வரும் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா..’ என்ற பாடலும் விஜய் மற்றும் ஷோபா சந்திரசேகர் இணைந்து பாடினர். இந்தப் பாடல் தேவா இசையில் உருவானது.

பின்னர் ஒன்ஸ்மோர் படத்தில் இடம்பெறும் ஊர்மிளா என்றாய் பாடலும் இவர்கள் காம்போவில் உருவானதே. அதன்பின் பல வருடங்கள் கழித்து வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி இசையில் உருவான ‘என் உச்சி மண்டையிலே..’ என்ற பாடல் ஷோபா சந்திரசேகர் பாடியதாகும். மேலும் ரசிகன் படத்தில் இடம் பெட்ரா LOVE மாமா பாடலும் எஸ்.பி.பி. யுடன் இணைந்து ஷோபா பாடியிருப்பார். மேலும் இந்த படத்தின் கதையும் ஷோபா சந்திரசேகர் எழுதியதே. இப்படி தன் அன்பு மகனின் சினிமா வளர்ச்சிக்காக உறுதுணையாக இருந்திருக்கிறார் தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...