தளபதி 68 படத்தில் நடிக்க மறுத்த லவ் டு டே இவானா! காரணம் அவரா இருக்குமோ!

விஜய் நடிப்பில் அண்மையில் லியோ திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்த போதும் வசூலில் அடித்து நொறுக்கி பட்டையை கிளப்பியது. இந்திய திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தமிழையும் தாண்டி உலக அளவில் வசூல் மன்னனாக இருக்கிறார். அந்த வகையில் லியோ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 படத்தில் நடித்த வருகின்றார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து படத்தின் டீசர் பொங்கலை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், இது ஒரு டைம் டிராவல் கதையை மையமாக வைத்து உருவாக்கி வருகிறது. இப்படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த், நடிகர் பிரபுதேவா, சினேகா, லைலா, மலையாள நடிகர் ஜெயராம் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாக உள்ளனர். மேலும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த மைக் மோகன் இப்படத்தின் வில்லனாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.

ஒரு பாடல் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட படப்பிடிப்புகள் தாய்லாந்தில் சிறப்பாக முடிவடைந்தது. அதை தொடர்ந்து கடந்த சில வாரம் சென்னையில் இந்த படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த படக்குழு விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகை ஒருவர் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் டுடே படம் கதாநாயகியாக நடிகை இவானா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதால் ஒரு வேலை அவரின் தங்கையாக இவானா நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது. இது நடிகை இவானாவிற்கு கிடைத்த பெரிய வாய்ப்பு இது என்றும் பேசப்பட்டது. ஆனால் நடிகை இவானா தளபதி 68 படத்தில் நடிக்கவில்லை என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யை நேரில் பார்க்க கேரவன் முன் காத்திருந்த அஜித்! அதன்பின் நடந்த அதிரடி!

அவருக்கு வாய்ப்பு வந்தது உண்மைதான். ஆனால் அது தங்கை ரோல் இல்லை என்றும் கூறப்படுகிறது. அந்த ரோலில் நடித்தால் இனி அதே போன்ற கதாபாத்திரம் தான் தொடர்ந்து வரும் என்பதால் வேண்டாம் என கூறிவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு விழுந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் சினேகா லைலா மற்றும் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி என பல நடிகைகள் இருக்கும் பட்சத்தில் இலியானாவின் கதாபாத்திரம் எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது குறித்து விரிவான விளக்கம் ஏதுமில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.