மூன்று பேருமே நடிகர்கள் தான்.. கமல் படத்தில் இணைந்து நடித்த 3 சகோதரர்கள்.. சுவாரஸ்ய பின்னணி..

தமிழ் சினிமாவில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இணைந்து நடிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் தனது சகோதரரகளுடன் இணைந்து கமல் படத்தில் நடித்துள்ளது பற்றியும் அது எந்த படம் என்பது பற்றியும் காணலாம். தமிழ் திரை உலகைப் பொறுத்தவரை ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் சுதர்சன்.

முதல்முறையாக சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த ’சுமதி என் சுந்தரி’ என்ற திரைப்படத்தில் தான் தமிழில் சுதர்சன் அறிமுகமானார். அதன் பிறகு ’பகடை 12’ ’நெஞ்சங்கள்’ ’தீர்ப்பு’ ’நீதிபதி’ ’சந்திப்பு’ ’பாயும் புலி’ ’புன்னகை மன்னன்’ ’வேலைக்காரன்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், மர்ம தேசம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

டிகை சுதர்சன் ஷைலாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு நடிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான ’வெண்ணிற ஆடை’ என்ற திரைப்படத்தில் வெண்ணிறை ஆடை மூர்த்திக்கு ஜோடியாக நடித்த இவர், மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் மகள்களில் ஒருவராக நடித்திருந்தார்.

சுதர்சன் மற்றும் சைலா ஸ்ரீ ஆகிய இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் சுதர்சனின் தந்தை, கடந்த 1930 களில் பிரபல வில்லனாக இருந்தவர். சுதர்சன் சித்தப்பா ஒரு கன்னட பாடலாசிரியர் என்பதால் அவரது குடும்பமே ஒரு கலை குடும்பம் என்று கூறினால் அது மிகையாகாது.

sudharshan

அவரும் அவரது சகோதரர்கள் பிரசாத் மற்றும் ஜெயகோபால் ஆகிய மூவருமே கன்னட திரை உலகில் பிரபலமாக இருந்தனர். கமல்ஹாசன் நடித்த ’மைக்கேல் மதன காமராஜன்’ என்ற திரைப்படத்தில் சுதர்சனின் இரண்டு சகோதரர்கள், படத்திலும் சகோதரர்கள் ஆகவே நடித்திருப்பார்கள். மேலும் ஒருவர் கமல்ஹாசனின் அப்பாவாக ஒருவரும் நாசரின் அப்பாவாக ஒருவரும் நடித்திருப்பார்கள்.

ஆனால் அதற்கு முன்பே மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் என்ற திரைப்படத்தில் ரெட்டி சகோதரர்கள் என்ற மூன்று கேரக்டர்களில் மூன்று சகோதரர்கள் இணைந்து நடித்திருப்பார்கள். ஆனால் சுதர்சன் மட்டுமே தமிழ் திரை உலகில் பல படங்களில் நடித்தார். குறிப்பாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் அவர் அதிகம் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சுதர்சன் கடந்த 2017 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி சிகிச்சையின் பலனின்றி காலமானார். அப்போது அவருக்கு 78 வயது. கன்னடத்திரை உலகமே அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.