இன்னும் 2 நாள்!.. தலைவர் 171 டைட்டில் வீடியோ வருது!.. அதிரடியாக அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 வது படத்தின் டைட்டில் டீசர் வரும் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது என்கிற அறிவிப்பை தற்போது சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் வெளியான முதல் படமே கவனத்தை ஈர்த்த நிலையில், கார்த்தி அவருடன் கூட்டணி வைத்து கைதி படத்தில் நடித்தார். விஜயின் பிகில் படத்துக்கு போட்டியாக வெளியான கைதி படம் விமர்சன ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

தலைவர் 171 டைட்டில் அப்டேட்:

கைதி படத்தின் அபார வெற்றியை பார்த்த விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்தார். கொரோனா காலத்தில் மக்கள் தியேட்டருக்கு வர பயந்த நிலையில் மாஸ்டர் படம் மீண்டும் மக்களை தியேட்டருக்கு கொண்டுவந்தது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் உடல் இணைந்து விக்ரம் படத்தை கொடுத்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்திற்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து கடந்த ஆண்டு லியோ படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.

விஜய்க்கு அடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக 47 வருடங்கள் கடந்து இன்னமும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அதன் டைட்டில் அறிவிப்பு வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

கடிகாரம் மற்றும் நேரத்தை மையப்படுத்தியே தலைவர் 171 வது படத்தின் டைட்டில் இருக்கும் என்பது தற்போது வெளியாகியுள்ள வீடியோ அறிவிப்பை பார்த்தாலும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து வரும் நிலையில் மே மாதம் இறுதியில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் நிறைவடைந்துவிடும் எனக்கு தகவல்கள் வெளியாகி உள்ளன. அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் திரைக்கு வருகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மொய்தீன் பாயாக நடித்த ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய மனக்கஷ்டத்தை அந்த படம் ஏற்படுத்தியது. இந்நிலையில் வேட்டையின் திரைப்படம் மற்றும் தலைவர் 171 வது படம் மீண்டும் ஜெயிலர் படம் அளவுக்கு வசூல் வேட்டையை நடத்தி ரஜினிகாந்தை சந்தோசத்தில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...