ஒரு வருடத்தில் மட்டும் 18 ஹிட் படங்களை கொடுத்த விஜயகாந்த்! என்னென்ன படங்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 1979ல் வெளிவந்த இனிக்கும் இளமை என்ற திரைப்படம் தான் நடிகர் விஜயகாந்த்க்கு முதல் படமாகும். இவருடைய 30 ஆண்டு காலத்தை வாழ்க்கையில் 155 திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 20 திரைப்படங்களுக்கு மேல் காவல்துறை அதிகாரிகளாக நடித்து சாதனை படைத்துள்ளார்.  இதனை தொடர்ந்து விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் நரசிம்மா, தென்னவன், எங்கள் அண்ணா, விருதகிரி போன்ற எட்டு படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். மேலும் 1985 இல் விஜயகாந்த் மற்றும் நளினி நடிப்பில் வெளியான அன்னை பூமி திரைப்படம் முதன் முதலில் தமிழ் திரை உலகின் 3d தொழில் நுட்பத்தை கொண்டு வெளியிட்ட திரைப்படம் என்பது முக்கியமான ஒரு தகவல் ஆகும்.

இதே போல் சரத்குமார்,சமுத்திரக்கனி, விஜய், வடிவேலு போன்ற பல நட்சத்திரங்களின் வளர்ச்சிக்கு விஜயகாந்த் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இத்தகைய பெருமைக்குரிய கேப்டன் விஜயகாந்த் தற்பொழுது நம்முடன் இல்லை கடந்த சில நாட்களின் முன் நுரையீரல் மற்றும் கொரோனா தொற்றின் காரணமாக காலமானார். அவர் மறைந்தாலும் அவரின் சாதனைகள் என்றும் அழியாமல் நிலைத்து வருகிறது.

அதே நேரத்தில் நடிகர் விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன். 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியான விஜய்காந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் நல்ல விமர்சனத்தையும் வசூல் சாதனையையும் செய்தது. அது மட்டும் இல்லாமல் விஜயகாந்தின் ஆல் டைம் ஃபேவரட் படமாக கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மாறி உள்ளது. இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் இளையராஜா இசையில் இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. இந்த படத்தில் விஜயகாந்துடன் இணைந்து சரத்குமார், மன்சூர் அலிகான், நம்பியார், ரம்யா கிருஷ்ணன்,லிவிங்ஸ்டன் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

நடிகர் விஜயகாந்த் 150 படத்திற்கு மேல் நடித்திருந்தாலும் எந்த படமும் வேற்று மொழி படங்கள் கிடையாது. மேலும் ஒவ்வொரு படத்தில் நடிக்கும் பொழுது மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்துள்ளார். விஜயகாந்த் படங்களில் சண்டைக் காட்சிகளை பார்ப்பதற்காகவே ரசிகர் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதும். சண்டைக் காட்சிகள் மட்டும் அல்லாமல், காதல் வசனம் நடனம் துடிப்பான பஞ்ச் டயலாக்குகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் விஜய்காந்தின் திரைப்படம் திருப்திப்படுத்தியுள்ளது. இதற்கு மேலாக நடிகர் விஜயகாந்த் ஒரே ஆண்டில் மட்டும் 18 திரைப்படங்களை நடித்து திரை உலகில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய டாப் 10 நடிகைகள் ஒரு பார்வை!

முதலில் நாம் பார்க்கும் திரைப்படம் மதுரை சூரன், அதை அடுத்து இரண்டாவது திரைப்படம் மெட்ராஸ் வாத்தியார், மூன்றாவது திரைப்படம் வெற்றி. இந்த திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் உடன் இணைந்து தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். நான்காவது திரைப்படம் வேங்கையின் மைந்தர், ஐந்தாவது திரைப்படம் நாளை உனது நாள், ஆறாவது திரைப்படம் நூறாவது நாள். இந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் வெற்றியை பெற்று வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. ஏழாவது திரைப்படம் குடும்பம், எட்டாவது திரைப்படம் மாமன் மச்சான், ஒன்பதாவது திரைப்படம் குழந்தை இயேசு, பத்தாவது திரைப்படம் சத்தியம் நீயே, 11 வது திரைப்படம் தீர்ப்பு என் கையில், 12வது திரைப்படம் இது எங்கள் பூமி, 13 வது திரைப்படம் வெள்ளைப்புறா, 14 வது திரைப்படம் வைதேகி காத்திருந்தாள், 15 வது திரைப்படம் நல்ல நாள், 16 வது திரைப்படம் ஜனவரி,17வது திரைப்படம் சபாஷ் மற்றும் பதினெட்டாவது திரைப்படம் வீட்டுக்கு ஒரு கண்ணகி அடுத்தடுத்து 18 படங்களில் இரவு பகல் பாராமல் கேப்டன் விஜயகாந்த் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...