ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட தெலுங்கு ஸ்டார்! இப்போ புலம்பி என்ன பண்ணுறது!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான ஜெயிலர் திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. பேட்ட, அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு முழு ரஜினி படமாக வெளியான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பும், நல்ல விமர்சனத்தையும் பெற்று வருவதால் ஜெயிலர் பட குழுவினர் சந்தோஷத்தில் தீக்கு முக்காடி உள்ளன. உலகம் முழுவதிலும் ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. திரைப்படம் பல இடங்களில் ஏற்கனவே வெளியான பல முன்னணி ஹீரோக்களின் படங்களின் சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

ஜெயிலர் படத்திற்கு வேற லெவலில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் நடிகர் ரஜினி தற்போது இமயமலை சென்றுள்ளார். நான்காண்டுகளுக்கு பிறகு தற்பொழுது படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே இமயமலை சென்றுள்ளார். இந்த நிலையில் நெல்சன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு காரணத்தால் சூப்பர் ஸ்டார் ரஜினி மிகுந்த சந்தோசத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் படம் வெளியான நாளிலிருந்து ரஜினி தனக்கு மெசேஜ் செய்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மறுபடியும் பாக்ஸ் ஆபீஸ் இங்கே நாங்க தான் கிங் என்று நிரூபித்துள்ளார் ரஜினி. குறிப்பாக மோகன்லால் மற்றும் ராஜ்குமார் ஆகியோரின் கெஸ்ட் ரோல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியின் ரஜினியுடன் இணைந்து மோகன்லால் மற்றும் ராஜ்குமார் இணைந்து மாஸாக நடித்துள்ளனர். அந்த காட்சிக்கு திரையரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினார்.

நயன்தாராவின் மாமனார், மாமியார் ஒரு போலீஸ் அதிகாரியா? இது என்ன புதுசா இருக்கு..

இந்த நிலையில் சமீபத்தில் ஊடங்களுக்கு பேட்டி கொடுத்த நெல்சன் இப்படத்தில் தெலுங்கு திரை உலகில் இருக்கும் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க முயற்சித்ததாகவும் அது நடக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்தார். மேலும் நெல்சன் ஜெயிலர் படத்தில் ஒரு பவர்புள் கதாபாத்திராத்தில் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க நினைத்ததாகவும் ஆனால் அது தவறியது என்றும், எதிர்வரும் காலங்களில் நான் கண்டிப்பாக அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என நம்புவதாக நெல்சன் தெரிவித்தார்.

ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவானால் ரஜினியுடன் பாலகிருஷ்ணன் நடித்தால் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...