கடைசில சுட்டாரு பாருங்க ஒரு வடை.. புளு சட்டை மாறனை பொங்கி எழவைத்த மனுசன்.. யாருப்பா அது!

புளுசட்டை மாறனுக்கு எதிராக சினிமாவில் பெரிய ஆட்களே கட்டம் கட்டுவதாக கூறப்படுகிறது. சினிமா துறையில் உள்ளவர்கள் அவருக்கு எதிரான காய்நகர்த்தால் மனுசன் கொதித்து போயிருக்கிறார். தனக்கு எதிரான செயல்பாடுகளை அண்மைக்காலமாக ட்விட்டரில் போட்டு பொங்கி வருகிறார். அவர் யாருக்கெல்லாம் எதிராக பொங்கினார் என்ற லிஸ்டை சொன்னால் நிச்சயம் இந்த செய்தியில் இடமே இருக்காது.இவ்வளவு எதிர்ப்பு ஜெயிலர் படம் குறித்து அவர் போட்ட விமர்சனம் தான் காரணம் என்கிறார்கள்.

இந்நிலையில் சினிமா தயாரிப்பாளரும், பிரபல சினிமா எழுத்தாளருமான தனஞ்செயன் போட்ட ஒரு ட்வீட், புளுசட்டை மாறனை பொங்கி எழ வைத்துள்ளது. கார்த்திக் ரவிவர்மா என்பவரை புளு சட்டை மாறன் பிளாக் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்திருந்த தனஞ்செயன், “சியேர்ஸ்.. மொத்த சினிமா இன்டஸ்ட்ரையை பிளாக் செய்தைபோல் என்னையும் பிளாக் செய்துவிட்டார் .. அவர் பிளாக் பண்ணுணதை என்ஜாய் பண்ணுங்க ” என்று கிண்டல் செய்திருந்தார். இந்த ட்வீட் தான் புளு சட்டை மாறனை தனஞ்செயனுக்கு எதிராக கொந்தளிக்க வைத்துள்ளது.மனுசன் பொறிந்து தள்ளிவிட்டார். அந்த ட்விட் பதிவில் புளுசட்டை மாறன் கூறுகையில், “எதிரிகளை மன்னித்து விடலாம். துரோகிகளை மன்னிக்க முடியாது.

நாடக அனுபவத்தால் தமிழ்த்திரை உலகிற்குக் கிடைத்த முத்து…! மிதமான நடிப்பில் உருக வைத்த முத்துராமன்

நேர்லயும், போன்லயும் நல்லவர்கள் போல பேச வேண்டியது. ட்விட்டர்லயும், யூட்யூப் பேட்டிலயும் நேரடியாகவோ அல்லது சாடை மாடையாகவோ வன்மத்தை கக்க வேண்டியது.

ஒருத்தர்.. ட்வீட்கள் போட்டு என்னை பாராட்டிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சி அதை எடிட் பண்ணிடுவாராம். இன்னொருத்தர் என்னை சாடை மாடையா கிண்டல் பண்ணிட்டு அப்பறம் அந்த ட்வீட்டை டெலிட் பண்ணிடுவாராம்.

விஜய் படத்தை வாங்க மறுத்த விநியோகிஸ்தர்கள்.. துணிந்து வாங்கிய ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு அடித்த ஜாக்பாட்..!

உங்களை வச்சிக்கிட்டு காலத்தை தள்ளுறது வேட்டிக்குள்ள ஓணானை விட்ட கதை.

இனி உங்க இஷ்டத்துக்கு வன்மத்தை கக்குங்க. அதை எப்படி சந்திக்கறதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

கடைசில சுட்டாரு பாருங்க ஒரு வடை.

அடேங்கப்பா!!

அப்பறம் என்ன வெங்காயத்துக்கு என்னை ப்ளாக் பண்ணீரு?

மிஞ்சிப்போனா என்னய்யா பண்ணுவீங்க.. என்னோட பர்சனல் விஷயங்களை நேரடியாவோ அல்லது இன்னொருத்தர் மூலமாவோ பொதுவுல ஷேர் பண்ணுவீங்க. பண்ணிட்டு போங்க. ஐ டோன்ட் கேர்.

ஆனா உங்களோட பர்சனல் விஷயங்களை பொதுவுல ஷேர் பண்ண மாட்டேன். அது நான் உங்க நட்புக்கு தர்ற மரியாதை.” இவ்வாறு புளுசட்டை மாறன் தனது ட்விட் பதிவில் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...