இத்தனை பாடல்களை மழைக் காலத்தில எடுத்திருக்காங்களா.. அதுல இந்த பாட்டு தான் பலரோட ஃபேவரைட்!

பொதுவாக திரைப்படத்தில் வரும் பாடல்கள் என்பது நம்மை அந்த பாடலின் தன்மைக்கேற்ப வித்தியாசமாக செயல்பட வைக்கும். உதாரணத்திற்கு காதல் கலந்த பாடல் என்றால், நம்மையும் காதலை பற்றி சிந்திக்க வைக்கும் வகையில் தூண்டி விடும். இப்படி பாட்டின் உணர்ச்சிகளுக்கேற்ப ஒரு பாடல் நம்மை இயங்க வைக்கிறது என்றால், அந்த பாடல் காலம் கடந்தும் நிலைத்து நிற்கக் கூடிய ஆற்றல் படைத்தவை.

இன்னொரு பக்கம், சில பாடல்களை நாம் எந்த காலத்தில் கேட்டாலும் அவை இனிமையானதாக இருக்கும். உதாரணத்திற்கு மழைக்காலங்களில் நல்ல இனிமையான பாடல்களை தேநீருடன் சேர்ந்து கேட்க வேண்டும் என பலரும் குறிப்பிடுவார்கள். மழையின் போது கேட்க ஏராளமான பாடல்கள் இருக்கும் சூழலில், மழையிலே படம்பிடிக்கப்பட்ட பாடல்கள் கூட ஏராளமாக உள்ளன.

அப்படி மழை பெய்யும் சமயத்தில் தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் குறித்து காணலாம். பாரதிராஜா இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் ‘கருத்தம்மா’. அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்டாகி இருந்த சூழலில், தென்மேற்கு பருவக்காற்று என தொடங்கும் பாடலில் நாயகன் மற்றும் நாயகி ஆகியோர், மழையில் நடனமாடியபடி பாடி இருப்பார்கள்.

ராஜேந்தர், சரிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் ‘உறவைக் காத்த கிளி’. டி. ராஜேந்தர் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு அவரே இசையமைத்திருந்த சூழலில், ‘பக்கத்தில் வந்தாலென்ன தீம்தனனா’ என தொடங்கும் பாடல், மழைக்கு நடுவே காட்சிப்பட்டிருந்த சூழலில், இரவு கேட்க இதமான பாடலாகவும் இது உருவாகி இருந்தது.

இதே போல, தமிழ் சினிமாவின் சிறந்த ஆன் ஸ்க்ரீன் ஜோடி என அறியப்படும் எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆகியோர் இணைந்து நடித்த படங்களில், மழையின் போது ‘சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ’ என்ற பாடல் தொடங்கி ஏராளமான பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதே போல, சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலு, ஓஹோ மேகம் வந்ததோ, அடடா மழைடா அடைமழைடா, மழை பெய்யும் போது (ரேணிகுண்டா திரைப்படம்), நீ வரும் போது நான் நனைவேனா, என்னை கொஞ்ச கொஞ்ச வா மழையே என மழையில் இடம்பெற்ற தமிழ் பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதிலும் மழையில் வரும் பாடல் என்றதும் நமக்கு முதலில் நினைவில் வரும் பாடல் என்றால் அது ‘சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்போமே’ தான். அரவிந்த் சாமி மற்றும் இஷா கோபிகர் நடிப்பில் உருவான ‘என் சுவாசக் காற்றே’ என்ற திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது.

மழை வந்ததும் அதனைக் கண்டு பயந்தோ வெறுத்தோ அல்லது குடையை காண்பித்து அதை ஒதுக்காமல், மழையை நேசியுங்கள் என்பதை மையப்படுத்தி வைரமுத்து இந்த பாடலை எழுதி இருப்பார். எம்.ஜி. ஸ்ரீகுமார் குரலில் காதில் தேன் வந்து பாயும் சூழலில், மழையை விரும்பும் நபர்களின் தேசிய கீதம் என்றே இந்த பாடலை சொல்லலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.