தமிழில் கலக்கிய போலீஸ் படம் – இது தான்டா போலீஸ்!

டாக்டர் ராஜசேகர் இவர் தமிழில் பாரதிராஜா இயக்கிய புதுமைப்பெண் படத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் தமிழை விட தெலுங்கில்தான் மிகப்பெரும் ஹீரோ இவர்.


தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த ஜீவிதாவை மணந்து கொண்டார்.

தமிழ் நாட்டில் தேனி மாவட்டத்தில் பிறந்தவர் நடிகர் ராஜசேகர்.

1990களில் இவர் நடித்த இதுதாண்டா போலீஸ் திரைப்படம் வந்தது. நேரடி தமிழ்ப்படமாக அல்லாது தெலுங்கில் இருந்து ரீமேக்கும் செய்யப்படாமல் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரு படம் வெகு நாட்கள் ஓடிய அதிசய நிகழ்வு இந்த படத்துக்கு உண்டு.

அதிரடியான போலீஸ் அதிகாரியாக டாக்டர் ராஜசேகர் இதில் நடித்திருந்தார். கூடவே ஸ்பாட் வைடா இவனுக்கு என்று சொல்லும் கேரக்டரில் டெரர் வில்லனாக ராமி ரெட்டி நடித்திருந்தார்.

மிகப்பெரும் வசூலை தமிழில் இந்த படம் அள்ளியது. 100 நாட்கள் ஓடியது இந்த திரைப்படம்.

தமிழில் ராஜசேகர் இந்த படத்தில் நடித்து இருந்தது பெரும் வரவேற்பை பெற்றது.

Published by
Staff

Recent Posts