நடிச்சது பிச்சைக்காரன் வேஷம்… ஆனா கிடைச்ச புகழோ வேற லெவல்… இந்தப் பிரபலம் தான் அவர்!

ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்கள் அவர்களுக்கு புகழை பெற்றுக் கொடுக்கும். அதற்கு முன் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் ஒரே படத்தில் புகழின் உச்சிக்குச் சென்றவர்கள் ஏராளம். அதற்கு சிறந்த உதாரணம் சீயான் விக்ரம். அவரது திரை வாழ்க்கையை சேது படத்திற்கு முன், சேது படத்திற்கு பின் என பிரிக்கலாம். இதுபோன்ற லில்ஸ்ட்டில் இணைந்தவர் தான் இளங்கோ குமரவேல்.

இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது நாசர் தான். தனது மாயன் படத்தில் இளங்கோவை அறிமுகப்படுத்தினார். அதன்பின் இயக்குநர் ராதா மோகன் பிரசன்னா நடித்த அழகிய தீயே திரைப்படத்தை எடுக்க அதில் நடித்தார். சினிமாக்களில் அதிகம் அறியப்படாத இவருக்கு புகழை கொடுத்து அறிய வைத்த படம் என்றால் அது அபியும் நானும் திரைப்படம். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் இயக்கும் இயக்குநர் ராதாமோகன் அபியும் நானும் திரைப்படத்தில் இவரை பிச்சைக்காரராக நடிக்க வைக்க கவனம் ஈர்த்தார்.

விருதுகளைக் குவிக்குமா ‘கண்ணே கலைமானே‘? அப்படி என்ன இருக்கு இந்தப் படத்துல?

அப்படத்தில் ரோட்டில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் இவரை பிரகாஷ்ராஜ்  வீட்டிற்குக் கூப்பிட்டு வந்து தனது வீட்டிற்கும் திரிஷாவிற்கும் பாதுகாவலராக இருக்கச் சொல்வார். பின்னர் ரவி சாஸ்திரியாகப் படம்முழுக்க அவ்வப்போது பிரகாஷ்ராஜைக் கலாய்க்கும் கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருப்பார் இளங்கோ குமரவேல்.

அதன்பின் தொடர்ச்சியாக சண்டக்கோழி, வெள்ளித்திரை, மதராசபட்டினம் போன்ற பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். குரங்கு பொம்மை படம் இவரின் நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்தது.

எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் திறம்பட நடிக்கும் இளங்கோ குமரவேலுக்கு இன்னும் திரையில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றே கூறலாம். சிறந்த எழுத்தாளராகத் திகழும் நடிகர் இளங்கோ குமரவேல் சென்னை கூத்துப்பட்டறையில் நடிப்புக்கலை பயின்றவர். சில நாடகக் குழுக்களையும் நடத்தி வருகிறார்.

மேலும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இயக்குநர் ராதா மோகனின் படங்களில் படங்களில் தொடர்ந்து தலைகாட்டிய அவருக்கு மற்ற பிரபல இயக்குநர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் ஏனோ அமையவில்லை. தற்போது கேப்டன்மில்லர் படத்தில் தனுஷுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...