விருதுகளைக் குவிக்குமா ‘கண்ணே கலைமானே‘? அப்படி என்ன இருக்கு இந்தப் படத்துல?

எளிய கதாபாத்திரங்கள் மக்களோடு இணைந்த நடிகர்களின் நடிப்புகள், இயல்பான வசனங்கள் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து படங்களைக் கொடுப்பவர் இயக்குநர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதி என்னும் மகா நடிகனை தமிழ் சினிமாவில் ஹீரோவாக தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் அறிமுகப்படுத்தியவர்.

முதல்படமே 3 தேசியவிருது பெற்றுத்தந்து சீனுராமசாமியை தமிழ் சினிமாவில் உற்று நோக்க வைத்தது. இதையடுத்து அவர் இயக்கிய தர்மதுரை, மாமனிதன், இடம் பொருள் ஏவல் போன்ற படங்களில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்தார். நீர்ப்பறவை படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்வதை கருவாக்கி அற்புதமான படைப்பைக் கொடுத்திருப்பார்.

உதயநிதி ஸ்டாலினை வைத்து அவர் இயக்கிய கண்ணே கலைமானே படம் விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றது. கல்லூரி படத்திற்குப் பிறது தமன்னா இதில் அழுத்தமான கேரெக்டரில் நடித்திருப்பார். இப்படத்தில் பார்வை மாற்றுத் திறனாளியான தமன்னா வங்கி அதிகாரியாக நடித்து பெயர் வாங்கியிருப்பார். தமன்னாவிற்கு இது 50-வது படமும் கூட.

தலைவர் படத்துக்கே நோ சொன்ன சுந்தர்.சி… அதுக்காக அடி மடியிலேயே கைய வச்சா என்னங்க நியாயம்…

உதயநிதி ஸ்டாலினும் கதையை உள்வாங்கி இயல்பான கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டார். யுவனின் இசையில் பாடல்களும் நெஞ்சை வருடின.

seenu

மேலும் உதயநிதியுடனான காதல் காட்சிகளும் வரம்பை மீறாமல் இயல்பாக சித்தரிக்கப்பட்டிருக்கும். வடிவுக்கரசியின் அனுபவ நடிப்பும், பூ ராமசாமியின் யதார்த்த நடிப்புமாக கண்ணே கலைமானே கிராமத்து கதையை கொஞ்சம் நவீனப்படுத்தியிருக்கும். மதுரை அருகே உள்ள கிராமங்களின் பின்னணியில் படமாக்கப்பட்டதால் அந்த மண்மணம் மாறாமல் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் கண்ணே கலைமானே படம் உணர்த்தும்.

நெட்பிளிக்ஸ்-ல் சாதனையை நிகழ்த்திய ஷாரூக்கான்: ஜவான் செஞ்ச சாதனை இதான்

இவ்வளவு சிறப்புகள் கொண்ட இப்படம் தற்போது உலக அரங்கில் மூன்று திரைப்பட விழாக்களில் பங்கேற்று போட்டிக்கு உள்ளது. அதாவது அக்லார்டு சர்வதேச திரைப்படவிழா, ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா, நியூயார்க் சர்வதேச திரைப்பட விழா என மூன்று சர்வதேச திரைப்பட விழாக்களில் கண்ணே கலைமானே இடம் பெற்றுள்ளது. இதனையொட்டி படத்திற்காக விருதுகள் கிடைக்கும் என படக்குழுவினரும், ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மூன்றாம்பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடலின் தலைப்பு இப்படத்திற்கு கூடுதல் வலுசேர்த்தது. இப்பாடல் கவியரசு கண்ணதாசனுக்கு கடைசிப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews