லாயர் குடும்பம்.. 16 வயதில் ரஜினிக்கு ஜோடி.. ஜெயலலிதாவுடன் சந்திப்பு.. அந்த நடிகை யார் தெரியுமா?

Rubini: லாயர் குடும்பத்தில் பிறந்து 16 வயதில் ரஜினிக்கும் 17 வயதில் கமலுக்கும் ஜோடியாக நடித்த நடிகை ஜெயலலிதாவின் வீட்டுக்கே சென்று அவரிடம் சுமார் அரை மணி நேரம் பேசியவர் ஒரு தமிழ் நடிகை என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அவர்தான் நடிகை ரூபிணி.

மும்பையை சேர்ந்த நடிகை ரூபிணி அங்கேயே தனது பள்ளி படிப்பை முடித்தார். சிறுவயதிலேயே அவருக்கு கலைகளில் நாட்டம் உண்டு, குறிப்பாக பரதநாட்டியத்தில் அவர் சிறந்தவராக இருந்தார். அவருடைய மூன்று தலைமுறை குடும்பமும் லாயர் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென வீட்டிற்கு வந்து காதல் மோதிரம் அணிவித்த ‘வாரிசு’ நடிகர்.. சிவரஞ்சனி வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..!

rupini3

இந்த நிலையில்தான் தற்செயலாக அவருக்கு ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அவர் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் படிப்பை தொடர்ந்தார். 1980ஆம் ஆண்டு இந்தி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஹிந்தியில் தொடர்ச்சியாக அவர் நடித்தார்.

தமிழில் ரூபிணி, விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் என்ற திரைப்படத்தில்தான் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அதே வருடத்தில் அவருக்கு மேலும் மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனிதன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு கமல்ஹாசன் உடன் அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் இரண்டு நாயகிகள் வேடத்தில் எந்த வேடத்தை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று கமல்ஹாசன் கூறியதாகவும் தான் விரும்பியே அப்புக்கு ஜோடியாக நடிக்கும் கேரக்டரை கேட்டதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

கமலுடன் நடிக்க மறுப்பு.. ரஜினி படத்திற்கு வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்த நடிகை..!

கமல், ரஜினியுடன் நடித்ததை அடுத்து அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் குவிந்தது. குறிப்பாக ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடம் கிடைத்தது. அதன் பின் உலகம் பிறந்தது எனக்காக, தாலாட்டு பாடவா, மைக்கேல் மதன காமராஜன், கேப்டன் பிரபாகரன்  உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். உழைப்பாளி திரைப்படத்தில் ரஜினியுடன் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.

rupini2

1993ஆம் ஆண்டு பத்தினிப் பெண் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி எழுதிய இதே பத்தினிப் பெண் என்ற நாவலின் தழுவலாகும். இந்த படத்திற்கு மாநில அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்தது. இந்த படத்திற்காக ரூபினி சிறந்த நடிகைக்கான மாநில அரசின் சிறப்பு விருதைப் பெற்றார். இந்தப் படம்தான் தனக்கு மிகவும் பிடித்தப் படம் என்று ரூபினி கூறியுள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒரு நாள் தன்னை வீட்டுக்கு அழைத்ததாகவும் மிகவும் பயந்து கொண்டே போனபோது அவர் தன்னிடம் மிகவும் அன்பாக பேசியதாகவும் ரூபிணி கூறியுள்ளார். அப்போதுதான் ‘நீங்கள் யாரிடம் குச்சிப்புடி நடனத்தை கற்றுக் கற்றுக் கொண்டீர்களோ அதே குரு தான் எனக்கும் கற்றுக் கொடுத்தார்’ என்று ஜெயலலிதாவிடம் கூறியதை அடுத்து உடனே ஜெயலலிதா அவருடைய கையைப் பிடித்து வாழ்த்து தெரிவித்ததாகவும் அது தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் திரைப்படங்களில் நடித்து உச்சத்திலிருந்தபோது அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததாகவும் அதன் பின்னர் ரூபினி பெற்றோர்கள் பார்த்தவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. அவருக்கு தற்போது ஒரு மகள் இருக்கிறார்.

பாரதிராஜாவுக்கு ஜோடியாக அறிமுகம்.. போலீஸ் கேரக்டரில் மாஸ்.. அந்த கால லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி..!

இப்போது கூட நல்ல கேரக்டர் கொடுத்தால் நடிக்க தயார் என்றும் சென்னைக்கு வருவதற்கு அதை ஒரு சாக்காக நான் எடுத்துக் கொள்வேன் என்றும் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சிறுவயதிலேயே ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரூபினி விரைவில் தமிழ் திரை உலகிற்கு திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.