மாஸ் ஹீரோ படங்களின் டிரைலரை மிஞ்சிய ரியல் ஹீரோ டிரைலர் : யார் அந்த பிரபலம் தெரியுமா?

2015 வரையில் தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகும் முன் டிரைலர் என்பது மட்டுமே  இருந்து வந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறி பர்ஸ்ட் லுக், டீசர், மேக்கிங் வீடியோ, பர்ஸ்ட் கிளிம்ப்ஸ் என புதுப்புது அவதாரங்களில் படத்திற்கான முன்னோட்டம் திரையிடப்பட்டு வருகிறது. சுமார் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய டிரைலர்களைப் பார்த்தே எதிர்பார்ப்பு எகிறி ஹிட் அடித்த படங்களும் உண்டு. டிரைலரில் மிரட்டலாகக் காட்டி பல்பு வாங்கிய படங்களும் உண்டு. ஆனால் மாஸ் ஹீரோ படங்களின் டிரைலர் என்றால் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

தற்போது மாஸ் ஹீரோக்களின் படங்களின் டிரைலரையே மிஞ்சும் அளவிற்கு ஒருவர் யூடியூபராக அவதாரம் எடுக்க டிரைலர் வெளியிட்டுள்ளார். அவர் வேறுயாருமல்ல தமிழக காவல்துறையின்  முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு IPS அவர்கள். தமிழக காவல் துறையிலும் ஐபிஎஸ் அதிகாரியாக இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்கை தன்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் தனது பள்ளிப்படிப்பை அரசுப்பள்ளியில் தான் பயின்றார். படிப்பிலும், விளையாட்டிலும் அதிக  கவனம் செலுத்தி பின்னர் குடிமைப்பணி தேர்வெழுதி ஐபிஎஸ் அதிகாரியானார். காவல் துறைக்கு வர நினைக்கும் இளைஞர்களின் ரோல் மாடலாகத் திகழும் சைலேந்திரபாபு நீச்சல், சைக்கிளிங் என தனது உடலைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டி வருபவர். இவரை ரோல் மாடலாகக் கொண்டு காவல் துறையில் சேர்ந்த இளைஞர்கள் ஏராளம்.

sylendra babu ips

கடந்த சில மாதங்களுக்குமுன் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபு அவர்கள் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுவார் என்ற பேச்சு அடிபட்ட நிலையில் தற்போது யூடியூபராக வலம் வரத்தொடங்க இருக்கிறார். இதற்காக இவர் வெளியிட்டுள்ள டிரைலரைப் பார்க்கும் போது மாஸ் ஹீரோக்களே தோற்று விடும் அளவிற்கு நடித்துள்ளார். அதில் டீக்கடையில் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் செய்தி பின்னணியில் ஒலிக்க ஒருவர் சைலேந்திர பாபுவுக்கு செய்தித்தாள் மற்றும் டீ கொண்டு செல்வது போலவும், பின்னணியில் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடல் ஒலிக்க மாஸ்என்ட்ரி கொடுக்கிறார்.

இவரின் தன்னம்பிக்கை பேச்சுக்களால் கவரப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் இவர் யூடியூப் தளத்தில் புதிதாக சேனல் தொடங்கியதால் இனி அடிக்கடி அவரின் பேச்சுக்களைத் தொடர்ந்து காணலாம் என ஆர்வமாய் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews