பொழுதுபோக்கு

குதிரையில் ஏறி ஃபுட் டெலிவரி.!! Swiggy நிறுவன ஊழியர் செய்த வினோத காரியம்;

இந்தியாவில் அனைத்து விதமான பொருட்களும் ஹோம் டெலிவரி செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. அதிலும் தற்போது உணவுப் பொருட்கள் அனைத்தும் நமது வாசல்களிலேயே வந்து கொடுக்கும் அளவிற்கு ஏராளமான சேவை நிறுவனங்களும் வந்துள்ளன.

அவற்றுள் சுகி, zomato உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் நம் தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் அதிக அளவில் இந்த ஃபுட் டெலிவரி வேலையில் தான் செய்து கொண்டு வருகிறார்கள்

அவர்கள் பெரும்பாலும் இந்த வேலைக்கு உபயோகிப்பது இருசக்கர வாகனத்தை தான். ஒரு சில இடங்களில் சைக்கிளிலும் சென்று பெட்ரோலுக்கு ஆகும் செலவு மிச்சப்படுத்தி இளைஞர்கள் வேலை பார்க்கிறார்கள்.

இவையெல்லாம் தாண்டி ஒருவர் குதிரையின் மீது ஏறிக்கொண்டு உணவு டெலிவரி செய்தது பெரும் வைரலை உண்டாக்கி உள்ளது. அதன்படி மும்பையில் சுகி நிறுவன ஊழியர் ஒருவர் கொட்டும் மழையில் குதிரையின் மீது ஏறி உணவு டெலிவரிக்கு சென்றுள்ளார்.

அதனை பார்த்த ரோட்டில் உள்ள அனைவரும் உடனடியாக வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.

Published by
Vetri P

Recent Posts