4 வது முறையாக இணையும் சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி!!

சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அயன். இந்தத் திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு மாஸ் ஹிட் படமாக அமைந்தது.

அதன்பின்னர், இந்தக் கூட்டணி மாற்றான் என்னும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட கதையில் களம் இறங்கியது. உடலுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை வேடத்தில் சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததுடன், அந்தப் படமும் ஹிட் ஆகியது.

அதன்பின்னர் கடந்த ஆண்டு இந்தக் கூட்டணி காப்பான் படத்தின்மூலம் மீண்டும் இணைந்தது. விவசாயிகள் பிரச்சினை என சிறப்பான கருத்துகளைக் கொண்டிருந்த இப்படம் வெற்றியடையவில்லை என்றாலும், சிறப்பான விமர்சனத்தினைப் பெற்றது.


தற்போது சூர்யா சுதா கொங்குரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஹரியுடன் 4 வது முறையாக இணைந்து அருவா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார், இதனை முடித்த கையோடு தற்போது சூர்யா- கே.வி.ஆனந்த் கூட்டணி 4 வது முறையாக இணைய உள்ளது என்று கூறப்படுகின்றது.

இதுவும் காப்பான் போன்று விவசாயம் குறித்த கதையாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Published by
Staff

Recent Posts