கண்டக்ராக பணியாற்றிய போது ரஜினி பட்ட கஷ்டங்கள்.. பின்ன சும்மாவா வந்துச்சு சூப்பர் ஸ்டார் பட்டம்

இன்று பல துறையிலும் சாதனையாளர்களாக விளங்கும் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு கஷ்டம் இருக்கும். அது பொருளாதார ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பல்வேறு சிக்கல்களையும், அவமானங்களையும் சுமந்து அதனை நெஞ்சில் உரமாக ஏற்றி இன்று பல்துறை சாதனையாளர்களாக விளங்குகின்றனர்.

அப்படி திரைத்துறையில் கண்டக்டராக தனது வாழ்க்கையைத் துவக்கி சினிமா மீது கொண்ட மோகத்தால் திரைப்படக் கல்லூரியில் நடிப்புக் கலை பயின்று கே. பாலச்சந்திரின் அறிமுகத்தால் சினிமாவில் நுழைந்து இன்று இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆகத் திகழ்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

புகழ்பெற்ற நடிகராக 80களில் விளங்கிய காலத்தில் மது, போதை வஸ்துகள் மீது மோகம் கொண்டு திசை மாறியவரை அவரின் மனைவியான லதா ரஜினிகாந்தும், அவரின் நலம்விரும்பிகள் சிலரும் அவரை போதையின் பாதையிலிருந்து மாற்றி ஆன்மீகத்தின் பால் நாட்டம் கொள்ளச் செய்து இன்று சிறந்த ஆன்மீகவாதியாகவும் விளங்கி வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படி திரைத்துறையில் மட்டுமல்லாமல் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த ரோல் மாடலாக விளங்கும் ரஜினிகாந்த் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை நடிகர் இளவரசு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதில் ரஜினி கண்டக்டராக பணியாற்றி காலகட்டத்தில் பேண்ட் சர்ட் தைத்தது போக மீதம் இருக்கும் துணியை பேக் -ஆக தயார் செய்து கொண்டாராம். துணிமணிகள் வைப்பதற்கு அந்தப் பையையே உபயோகப்படுத்தி வந்தவர் சென்னை வந்த போதும் அந்த பையையே கொண்டு வந்திருக்கிறார்.

ஒரே மெட்டில் இளையராஜா செய்த புதுமை.. இந்தப் பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு சீக்ரெட்-ஆ?

ஒருமுறை ஆடிஷனுக்கு கலந்து கொண்ட சமயத்தில் அந்த பேக்குடனே வர அவரைப் பார்த்து சிரித்தார்களாம். ஆனால் அந்த ஆடிஷனில் அவர் தேர்வாகி விட்டாராம். அதுமட்டுமன்றி சென்னையில் அவர் தங்கியிருந்த ரூமுக்கு 32 ரூபாய் வாடகை. ஆனால் அவருக்கு மட்டும் 28 ரூபாய்க்குக் கொடுத்தார்களாம்.

ஏனெனில் அந்த அறையின் கீழ்ப்பகுதியில் சமையலறை இருந்ததால் புகை அதிகமாக வருமாம். இவர் அந்தப் புகையை மறைக்க ஒரு துணியைக் கட்டி அதில் குடியிருந்திருக்கிறார். இவ்வாறு ரஜினி சினிமாவில் உச்ச நடிகராவதற்கு முன்னதாக பல சோதனைகளைக் கடந்தே வந்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews