தம்பி விஜய் சொல்வது சரிதான்… த. வெ. க தலைவர் விஜயை ஆதரித்த நா. த. க தலைவர் சீமான்…

சீமான் தமிழ்நாட்டில் அரணையூரில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் மொழி மீது அதீத பற்றினைக் கொண்டவர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவினால் சென்னைக்கு வந்தார்.

ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1996 ஆம் ஆண்டு ‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் பிரபு மற்றும் மதுபாலா நடித்திருந்தனர். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

பின்னர் ‘இனியவளே'(1998), ‘வீரநடை'(2000) படங்களை இயக்கினார். அடுத்ததாக நீண்ட இடைவேளைக்கு பிறகு 2006 ஆம் ஆண்டு நடிகர் மாதவனை வைத்து அதிரடி திரைப்படமான ‘தம்பி’ மற்றும் ‘வாழ்த்துக்கள்’ படங்களை இயக்கினார். அதேநேரத்தில் நடிகராகவும் படங்களில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்றார். ‘பள்ளிக்கூடம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘தவம்’ போன்றவை அவர் நடித்ததில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

பின்னர் சினிமாவை விட்டு விலகி நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இவரது ஆங்கிலம் கலக்காத துடிப்பான தமிழ் பேச்சுக்காக ரசிகர்களைக் கொண்டவர். ஈழ தமிழர்களுக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும், விவசாயிகளின் மேன்மைக்காகவும் குரல் கொடுப்பவர் சீமான்.

தற்போது நடிகர் விஜய் அவர்களும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்தித்து ஊக்கதொகை மற்றும் பரிசுகளை வழங்கி வருகிறார். சமீபத்தில் விஜய் நடத்திய கல்வி விருது வழங்கும் விழாவில், அரசியலையும் கேரியர் ஆப்ஷனில் கொண்டு வர வேண்டும், படித்தவர்கள் தலைவர்கள் ஆகவேண்டும் என்று கூறினார். இதை பற்றி பத்திரிகையாளர்கள் சீமானிடம் கேட்ட பொழுது, தம்பி விஜய் சொல்வது சரிதான். படித்தவர்கள் தான் நாட்டை ஆள வேண்டும் என்ற கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் சீமான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews