பஞ்சாப் நேஷனல் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கணக்கு மூடப்படும் அபாயம்..!

பஞ்சாப் நேஷனல் வங்கி சில சேமிப்பு கணக்கு நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் உடனடியாக இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்று ஆண்டுகள் ஒரு சேமிப்பு கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதே போல் நீண்ட காலமாக பூஜ்ஜியத்தில் மினிமம் பேலன்ஸ் இருந்தால் அந்த கணக்கு நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஒருவேளை வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கை தொடர விரும்பினால் உடனடியாக கேஒய்சி பெற வேண்டும் என்றும் அதற்கு ஜூன் 30-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. எனவே நீண்ட காலமாக மினிமம் பேலன்ஸ் வைக்காமல் அல்லது எந்த விதமான பரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேமிப்பு கணக்கு முடக்கப்படும் என்றும், அந்த அக்கவுண்டை தொடர வாடிக்கையாளர்கள் விரும்பினால் உடனடியாக நீங்கள் அக்கௌன்ட் வைத்திருக்கும் கிளைக்கு சென்று கேஒய்சி நடைமுறையை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகளை வைத்து ஆன்லைனில் சில முறைகேடுகள் செய்யப்படுவதாகவும் அதனால் சில வழக்குகளையும் பஞ்சாப் நேஷனல் வங்கி எதிர் கொள்வதாகவும் அதனால் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீண்ட காலமாக பரிவர்த்தனை செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் அக்கவுண்ட்டை தொடர விரும்பினால் கேஒய்சி படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews