என்னை மாதிரி உனக்கும் நாமம் போடப்போறாங்க… சிவகுமாருக்கு கிலி உண்டாக்கிய சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் எல்லாமே ரசிக்கக்கூடியதாகத் தான் இருக்கும். அந்த வகையில் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் சில படங்கள் நன்றாக நடித்தும் தோல்வியைத் தழுவியுள்ளன.

அது புரியாத புதிராகவே உள்ளன. அந்தவகையில் கப்பலோட்டிய தமிழன் படமும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நிகழ்ச்சி ஒன்றில் இப்படி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் படம் பெரிய வெற்றி அடையாதது குறித்து எங்கிட்ட மட்டுமல்ல. பொது வெளியிலேயே தன்னோட கருத்தைப் பதிவிட்டுள்ளார். ஒரு முறை ‘இனி ஒரு சுதந்திரம்’ படத்தை நடிகர் திலகம் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார் சிவகுமார். அந்தப் படத்தில் சிவக்குமார் அற்புதமாக நடித்திருப்பார்.

KT
KT

படத்தை சிவாஜி பார்த்து விட்டு வெளியே வந்தாராம். அப்போது அவர் சொன்னது இதுதான். ‘உன்னை மாதிரி தான் கப்பலோட்டிய தமிழன் என்ற உணர்ச்சிப்பூர்வமான படத்தில் நடித்தேன். நமது தமிழக ரசிகர்கள் நல்ல குழைச்சிப் பெரிய நாமத்தைப் போட்டு விட்டார்கள். இப்போ உனக்கும் குழைச்சிக்கிட்டு இருக்காங்க. கொண்டு போய் முகத்தைக் காட்டு’ என்றாராம் சிவாஜி.

எந்த அளவுக்கு அவரது மனம் வேதனைப்பட்டு இருந்தா அந்த ஒரு கருத்தை வெளியிட்டுருப்பாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகத்துக்கே இந்த நிலைமை என்றால் மற்ற நடிகர்கள் எம்மாத்திரம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அப்படி இருக்கும்போது சிவாஜி சிவகுமாரைப் பார்த்து அப்படி சொன்னதில் தவறு ஏதும் இல்லை.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் எந்த ஒரு நடிகரும் தன்னோட படம் தோல்வி அடைந்தால் கூட அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நடிகர் திலகம் அப்படி அல்ல. அவர் எந்த இடத்திலும் தைரியமாக அது தோல்விப் படம் என்றால் அதை ஒத்துக் கொள்ள தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ஆர்.பந்துலு இயக்கிய கப்பலோட்டிய தமிழன் படம் 1961ல் வெளியானது. இதில் சிவாஜி வ.உ.சிதம்பரனாராகவே வாழ்ந்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்கு முன் பிறக்காதவர்களுக்கும் அந்த சுதந்திரத் தாகம் எப்படிப்பட்டது என்பதைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.

அவ்வளவு உணர்ச்சிகரமான நடிப்பையும், தேசப்பற்றையும் அப்படியே கொண்டு வந்திருப்பார் தன் அபார நடிப்பால்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews