சூப்பரோ சூப்பர்,… அஜித் பிறந்தநாளைக் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….!!

நடிகர் அஜித் இன்று தனது 49 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கொரோனாவால் உலகம் இன்னல்களை சந்தித்துவரும் இந்தநிலையில், தனது பிறந்தநாளை தான் கொண்டாடப்போவதில்லை என்றும், அதேபோல் ரசிகர்களும் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று அஜித் அலுவலகத்தில் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஆனால் அஜித் ரசிகர்களோ, நாங்கள் கொண்டாடியே தீருவோம் என்று வெறித்தனமாக பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா நடிகர்கள், நடிகைகள் எனப் பலரும் அஜித்துக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.


வெளியில் வந்து அஜித் பிறந்தநாளை ரசிகர்களால் கொண்டாட முடியவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் தெறிக்க விட்டு வருகின்றனர். அந்த வகையில் அஜித் ரசிகர்கள் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

விஜய் ரசிகர்களோ வேற லெவலுக்குப் போய் அஜித் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர், அதாவது விஜய் ரசிகர்கள் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி தல அஜித்துக்கு வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இணையவாசிகள் பலரும் தல- தளபதியின் ஒற்றுமையான கொண்டாட்டத்தினால் மகிழ்ந்து போய் உள்ளனர். இதேபோல் எப்போதும் ஒற்றுமையாக அடுத்த மாதம் வரவுள்ள தளபதி பிறந்தநாளையும் கொண்டாடுவார்கள் என்ற கருத்து கூடுதலாக நிலவி வருகிறது. என்னதான் அடிச்சிக்கிட்டாலும் அஜித்- விஜய் போல் அவர்களது ரசிகர்களும் நண்பர்கள்தான் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

Published by
Staff

Recent Posts