பாதி பட ஷூட்டிங்கில் நடையைக் கட்டிய ரஜினி.. விடாத இயக்குநர்.. மீண்டும் உருவாக்கி ஹிட் கொடுத்த அதிசயம்!

எத்தனையோ நடிகர்கள் பாதி படத்துடன் தங்களுக்கு சொன்ன கதையை விட்டு விட்டு வேறு கதையை எடுக்கும் இயக்குநர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஷுட்டிங்கில் இருந்து வெளியேறிய வரலாறு உண்டு. அஜீத்துக்கு இதேபோல் பல படங்கள் மிஸ் ஆகிஇருக்கின்றனர். நேருக்கு நேர், நான் கடவுள், கஜினி என அவர் கேரியரில் பல நல்ல படங்களை இழந்திருக்கிறார். இதே நிலைமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.

1991-ல் இயக்குநர் ராஜசேகர் ரஜினியை வைத்து காலம் மாறிப் போச்சு என்ற படத்தை எடுக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக கலந்து கொண்டு நடித்த ரஜினி பின்னர் இந்தக் கதையின் மேல் நம்பிக்கை இழந்திருக்கிறார். எனவே 15 நாட்களுக்கு மேல் நடித்து விட்டு பின்னர் இந்தப் படம் வேண்டாம் என்று இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார்.

எள்ளு வய பூக்கலையே..! கண்களை குளமாக்கிய பாடலுக்குப் பின் இப்படி ஒரு அர்த்தமா?

மேலும் அதோடு நிற்காமல் கன்னடப் படம் ஒன்றின் கேஸட்டைக் கையில் கொடுத்து இந்தப் படத்தை நாம் ரீமேக் செய்வோம் என்று கூறினாராம். பின்னர் இயக்குநர் ராஜசேகர் கன்னடத்தில் வெளியான தேவா என்ற படத்தினை தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை, கதையில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி தர்மதுரை என்று பெயரிட்டு மீண்டும் ரஜினியை வைத்து ஷுட்டிங் நடத்தியிருக்கிறார்.

தம்பிகள் செய்த குற்றத்திற்காக பழியை தான் ஏற்று பின் சிறை சென்று பின் திரும்பி அவர்களை என்ன செய்தார் என்பது தான் கதை. 1991 பொங்கலன்று வெளியான தர்மதுரை சூப்பர் ஹிட் ஆனது. திரையில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. இதில் ஒரு வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இப்படத்தின் நூறாவது நாளில் இயக்குநர் ராஜசேகர் சாலைவிபத்தில் மரணம் அடைந்தார்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இளையராஜாவின் இசையில் பாடல்களும் பேசப்பட்டது. மாசி மாசம் ஆளான பொன்னு என்ற பாடலை இளையராஜா தர்மேஷத்திரம் என்ற தெலுங்குப் படத்திலும் என்னோ ராத்திரி என்று மறுஉருவாக்கம் செய்து ஹிட் கொடுத்தார். மேலும் ராகவா லாரன்ஸ் நடித்த பாண்டி படத்திலும் இப்பாடல் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Published by
John

Recent Posts