இந்தப் படத்துல ரஜினி நடிச்சிருந்தா எப்படி இருக்கும்? தட்டித் தூக்கி ஹிட் கொடுத்த கேப்டன்..!

சினிமாவில் பல வாய்ப்புகள் பல நேரங்களில் கை நழுவி அவர்கள் வேண்டாம் என ஒதுக்கிய படங்கள் வேறொரு ஹீரோவிடம் செல்லும் போது சூப்பர் ஹிட்டாகி அவர்களுக்கு ஒரு அடையாளத்தித் தருகிறது. அந்த வகையில் அஜீத்துக்கு கஜினி, நான் கடவுள் போன்ற அற்புதமான படங்கள் வந்தும் அவர் அதை நிரகாரித்தார். ஆனால் அந்த இரு படங்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

இதேபோல் ரஜினி நடிக்க வேண்டிய ஒரு படமும் கைமாறி கேப்டன் விஜயகாந்துக்கு சென்றிருக்கிறது. இயக்குநர் முருகதாஸ் முதன் முதலாக அஜீத்தை வைத்து இயக்கிய தீனா படத்தின் வெற்றிக்குப் பின் அடுத்த படம் இயக்க தயாராகி வைத்திருந்த கதைதான் ரமணா. ஆனால் கதைப்படி அதிகப்படியான கல்லூரி மாணவர்களைக் கூட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக அவரை நடிக்க வைப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது.

இதை பற்றி பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ். பிரபு கூறுகையில் ‘முதலில் இந்தப் படத்தில் ரஜினி நடிக்க வேண்டியதாம். ஆனால் ரஜினி நடித்திருந்தால் கண்டிப்பாக அவரின் ஹீரோயிசம்தான் வெளிப்படும். எதார்த்தத்திற்கும் அப்பாற்பட்டு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அதற்கு விஜயகாந்த் தான் பொறுத்தமாக இருப்பார்’ என எம்.எஸ்.பிரபு சொல்லி விஜயகாந்த் இந்த கதைக்குள் வந்திருக்கிறார்.

Ramana

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கல்லூரி மாணவர்களையும் கூட்டுவது என்பது எளிதல்ல. ஆனால் அப்படியும் காட்ட வேண்டும். அதை எப்படி காட்டினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? என்பதை அறிந்து அதற்கு விஜயகாந்த் மாதிரியான ஒரு ஆள் சொன்னால்தான் கேட்பார்கள் என்று நினைத்து இந்தப் படத்தை எடுத்தார்களாம்.

இளைராஜாவின் இசையில் இப்படம் வெளியாகி திரை உலகையே மாற்றியது. புரபஸராக விஜயகாந்த் நடித்த இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக அமைந்தது. மேலும் லஞ்சத்திற்கு எதிராக இப்படம் உரக்கக் கத்தியதால் படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. 100 நாட்களைக் கடந்து வெற்றி பெற்றது. மேலும் கேப்டனின் சாந்தமான நடிப்பும், இறுதியில் அவர் இறந்து போவது போல காட்சிகளும் ரசிகர்களை அழ வைத்தன. முதலில் இறந்து போவது போன்ற காட்சிக்கு அவரது மனைவி பிரேமலதா யோசித்தாராம்.

ஆனால் விஜயகாந்த் அவரிடம் கதையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி பின் அவரை சம்மதிக்க வைத்தாராம். கேப்டன் வாக்கு பலித்தது போலவே படம் வெளியாகி இயக்குநர் முருகதாஸ்-க்கு தமிழ் சினிமாவில் நிரந்த ஹிட் இயக்குநர் அடையாளத்தைக் கொடுத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews