வடிவேலு சாரை பார்த்தா அப்படி தெரியாது… புலம்பி தவித்த சுந்தரா டிராவல்ஸ் நடிகை!

முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி, ராதா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2002ல் வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ராதா பின்பு திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு தாயானார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா -2 சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலில் பேட்டி அளித்த அவர், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறித்து கூறியுள்ளார்.

எனக்கு படத்தில் நடிக்கின்ற ஆர்வம் கொஞ்சம் கூட கிடையாது. சினிமாவில் பெரிதளவில் ஆர்வம் இல்லாமல் தான் நடிக்க வந்தேன். மேனேஜர் லோகு என்பவர் நீ ரொம்ப அழகா இருக்க, ஹீரோயினா நடிக்கலாம் என்று கூறினார். ஒருநாள் மெளனம் ரவியிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்பு போட்டோஷூட் எடுத்தபோது, முரளி சார் நடிக்கும் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் ஹீரோயினா நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிஜமாவே ஹீரோயினாக நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.

“ஆனால், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடிக்கும் போது அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ரொம்பவே கூச்சமா இருந்தது. ஒருகட்டத்தில் அந்தமாதிரி ஆடையெல்லாம் போடமாட்டேன் என்று கூறிவிட்டேன். படப்பிடிப்பு முடிந்து, தியேட்டரில் ரசிகர்களோடு திரையரங்கில் படத்தை பார்த்தபோது, அந்த கேரக்டர் இப்படி ரீச் ஆகும்னு நினைக்கவே இல்ல. நடிக்க கூப்பிட்டாங்கன்னு தான் போனேன். ஆனா இப்ப வரைக்கும் அந்த கேரக்டருக்கு ரெஸ்பான்ஸ் தராங்க.

அதுவும் வடிவேல் சார் ஈகோ பார்க்கமாட்டார் ரொம்ப மெனக்கெடுவார். புதுமுகம் என்பதை புரிந்துகொண்டு கோப்பரேட் பண்ணி நடித்தார். அவரோட இருந்தா சூட்டிங் ஸ்பாட் கலகலன்னு இருக்கும். ஜூனியர், சீனியர் மாதிரி ட்ரீட் பண்ணதில்லை. ஆனால், முரளி சார் அப்படி பார்ப்பார். அவர் கொஞ்சம் கடுகடுன்னு இருப்பார். ஸ்கூல் படிக்கும்போது முரளி சார் படங்களை பார்த்து மிரண்டு போயிருக்கேன். அவருக்கு ஜோடியா நடிச்சது ரொம்ப ஹேப்பி.

சமீபத்தில் வெளியே சென்றபோது ரசிகை ஒருவர் மேடம் கர்பா, சொல்லி அன்பை வெளிப்படுத்திய விதம் வித்தியாசமா இருந்தது. ஆனால், சுந்தரா டிராவல்ஸ் படத்திற்கு பிறகு திருமண வாழ்க்கை தான் முக்கியம் என முடிவெடுத்தேன். செய்த தவறுகளை திருப்பி மாற்ற முடியாது, மீண்டும் அதே தவறை செய்யாமல் இருப்பது நல்லது எனது வாழ்க்கை புரியவைத்துவிட்டது” என தெரிவித்தார்.

யாராவது நம் மீது அளவுக்கடந்த அன்பு வைச்சுட்டாங்கனா அவங்களை காரணமே இல்லாம அன்பை கொடுப்பேன். மனசுக்குள்ளே ஒன்னு வைச்சுக்கிட்டு வெளியே ஒன்று பேச தெரியாது. மறைக்க தெரியாது உடனே ரியாக்ட் பண்ணிடுவேன். உண்மையா ஒருத்தரை நேசித்து நம்பி ஏமாந்துட்டேன். அந்த வாழ்க்கையை நினைச்சா இப்போ கூட டிப்ரஷன் ஆகிறது. என் வாழ்க்கையை யாரும் கெடுக்கலை நானே என் லைஃபை ஸ்பாயில் பண்ணிகிட்டேன் என மனம் உருக தெரிவித்தார்.

நான் செய்த தவறை நினைத்து பைத்தியமே பிடிக்க ஆரம்பித்துவிட்டது. யாரை நம்புறது, இதை சொல்லலாமா வேண்டாமா, மனதுக்குள்ளே அழுது தீர்த்த நாட்கள் அதிகம். இப்படி நடந்துவிட்டதே, எனக்கே என் மீது வெறுப்பு வர ஆரம்பித்துவிட்டது. சாக்கடையில் கிடந்து எழுந்த மாதிரி பீல் பண்ணுவேன். சரியா தூங்க மாட்டேன். இப்படியொரு நிலையில் மீண்டு வர கடவுள் மன உறுதியை காெடுத்திருக்கார் என தெரிவித்தார். இப்போது பாசிட்டிவான மனிதர்களோடு பேசுகிறேன். அதற்கென்று நேரத்தை ஒதுக்கி புது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பாரதி கண்ணம்மா 2 சீரியல் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ராதா சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக வதந்தி செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது. பின்னர், நான் உயிரோடுதான் இருக்கேன். இதுபோன்று செய்தியை பரப்பி மன அழுத்தத்திற்கு ஆளாக்காதீர்கள் என நடிகை ராதா விளக்கம் அளித்திருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...