தீபாவளி கொண்டாடுவதற்கு பின்னால் உள்ள புராணக் கதைகள்!

இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ராமாயணத்தின்படி சிலர் இராமன் 14 வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பிய நாளே தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளனர்.

கந்த புராணத்தி ன்,  பார்வதியின் தவத்தால் மனம் நெகிழ்ந்து சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீசுவரர்’ உருவமெடுத்த நாள் தான் தீபாவளி என்று சொல்லப்படுகிறது.

இன்னும் சிலர், இராமர் இராவணனை அழித்தநாளே தீபாவளி என்றும் சொல்கின்றனர்.

இன்னும் சிலர் மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் நாடு திரும்பி மணி மகுடம் சூட்டிய நாளையே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கூறுகின்றனர்.

மகாபாரதத்தினைப் பொறுத்தவரை கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற நாள் தீபாவளி என்பதே பலரும் கூறும் கதையாகும். அந்தநாளில் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று நரகாசுரன் கேட்டதாகவும் அதனாலேயே, தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்றும் கூறுகின்றனர்.

Published by
Staff

Recent Posts