நட்சத்திர பலம் மிகுந்த நாள் அனைத்து நன்மைகளையும் செய்யும்

நடப்பு காலத்தில் மனிதர்கள் பல்வேறுவிதமான தோஷ குறைபாடுகளால் அவதியுறுகின்றனர். செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திரதோஷம், இன்னும் பல்வேறு விதமான தோஷங்களால் அவதியுறுகின்றனர்.

இன்னும் ஆயுள் ரீதியான தோஷங்கள், குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷங்கள் என பல்வேறு விதமான தோஷங்கள் ஏற்படுகிறது

இந்த தோஷங்களை உரிய ஜோதிடரிடம் கேட்கும்போது குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது, குறிப்பிட்ட பரிகாரம் செய்தால் நல்லது என்று சொல்வார்கள் அந்த பரிகாரங்களை நமது நட்சத்திரம் வரும் நாளில் செய்வது நன்மை பயக்கும்.

உதாரணமாக மிருகசீரிட நட்சத்திரம் என்றால் மிருகசீரிடம் என்று காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நாளில் செய்வதால் அந்த தோஷங்கள் நீங்கி பரிகாரம் சீக்கிரம் பலன் கொடுக்க வாய்ப்புண்டு.

அதனால் தங்களது நட்சத்திர நாளில் பரிகாரங்களை செய்தால் அனைத்து நன்மையும் பெறலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.