அய்யய்யோ..! என்னது! அப்பாவ வைச்சு Direction-ஆ? ஷாக்கான நடிகை ஸ்ருதிஹாசன்

உலக நாயகனின் வாரிசுகளான ஸ்ருதிஹாசனும், அக்ஷரா ஹாசனும் தந்தையைப் போலவே திரைத்துறையில் நடிப்பு, இசை, இயக்கம், பாடலாசிரியர் என பன்முகம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஸ்ருதிஹாசன் ஹேராம் படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

ஆனால் அதற்கு முன்னரே தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற போற்றிப் பாடடிபொண்ணே பாடலை மழலைக் குரலில் பாடி அசத்தியிருப்பார். பின் தனுசுடன் நடித்த 3 திரைப்படம், சூர்யாவுடன் நடித்த ஏழாம் அறிவு போன்ற படங்கள் ஸ்ருதி ஹாசனுக்கு திருப்புமுனையைக் கொடுக்க தொடர்ந்து விஜய், அஜீத், விஜய் சேதுபதி, விஷால் போன்ற முன்னணி நாயகர்களுடனும், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கமலஹாசன் தயாரித்து நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்ததும் இவரே. மேலும் செம்மொழி மாநாட்டிற்காக இவர் பாடிய செம்மொழியான தமிழ்மொழியே என்ற பாடல் இன்றும் பலரது ரிங்டோனாக இருக்கிறது.

மேலும் இவரது தங்கை அக்சரா ஹாசனும் அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்திலும், விவேகம் படத்தில் மாஸ் நாயகியாகவும், கடராம் கொண்டான் படத்தில் நாசர் மகனுடன் ஜோடி சேர்ந்தும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் ஸ்ருதிஹாசன். அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால்சலாம் மூலம் தந்தையை இயக்குகிறார் அதுபோல் நீங்களும் அப்பாவை வைத்து இயக்குவீர்களா என்று கேட்க, “அய்யய்யோ.. என்னது அப்பாவை வைச்சு படமா? சான்ஸே இல்ல.. அப்பாவோட உயரத்தை யாராலுமே தொட முடியாது. என்னால முடிஞ்ச அளவுக்கு என்னோட துறையில் செயல்படுறேன். அவரோட உயரத்தை தொட முடியாது என்றும், ஐஸ்வர்யா ரஜினி தந்தையை வைத்து இயக்குவது அவருடைய ஸ்டைல் என்றும், என்னோட ஸ்டைல் வேறு” என்றும் பதிலளித்துள்ளார்.

நேற்று முன்தினம் தீபாவளியை பண்டிகையையொட்டி தன்னுடைய காதலர் சாந்தனுவுடன் பட்டு புடவை கட்டி, படு ஜோராக கொண்டாடியுள்ளார். சாந்தனுவும் பட்டு வேஷ்டி சட்டையில் உள்ளார். ஸ்ருதி ஹாசன் சாந்தனுவை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து படு நெருக்கமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.