நவராத்திரியில் செய்யப்படும் விசேஷ பூஜைகள்!!

நவராத்திரி விழா என்பது மகிசாசுரன் என்ற அரக்கனுடன், சக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் வதம் செய்த நாள் ஆகும். இதுதான் தற்போது நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தை மாதம் ராஜமாதங்கி நவராத்திரி, பங்குனியில் வசந்த நவராத்திரி, ஆடியில் ஆஷாட நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி என வருடத்துக்கு நான்கு நவராத்திரிகள்  உண்டு. இந்த நான்கு நவராத்திரிகளுமே சில இடங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

கும்பத்திற்கு பூஜை:

சந்தனம், பூ, மாதுளை, வாழை, பலா, மா ஆகியவற்றுடன் நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளைக் கொண்டு பூஜித்தல் வேண்டும். புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகிற்பட்டை பன்னீர் கொண்டு பூஜித்தல் வேண்டும்.


கன்னிகைக்கு பூசை:

இரண்டு வயது முதல் பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பூஜித்தல் வேண்டும், ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூஜிக்கப்படவேண்டும்.

கன்னிகைகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து, அறுவகை சுவைகளுடன் அமுது படைக்க வேண்டும்.

கன்னி வாழைக்கு பூஜை:

கோயில்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழக்கம். அசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவனை வழிபட்டு வன்னி மரத்தில் ஒளிந்தவனை சம்காரம் செய்தாள்.

இதனால் நவராத்திரியில் மாலை வேளை, என 2 முறை வாழை வெட்டுவது செய்யப்பட்டு பூஜிக்கப்படும்.

Published by
Staff

Recent Posts