எஸ்.பி.பி தனது முதல் தமிழ் பாடலுக்கான சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன் என்ற பின்னணி பாடல் ஜாம்பவான்கள் வீற்றிருந்த நேரத்தில் பாடும்நிலாவாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரையுலகில் தனது வசீகர குரலால் கட்டிப் போட்டவர்தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னதாகவே எம்.ஜி.ஆருக்காக இவர் பாடிய ஆயிரம் நிலவே வா.. என்ற பாடல் முதலில் வெளியானது. இந்த பாடல் எஸ்.பி.பி.க்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் ஹிட் பாடல்களை பாடியிருந்தார். இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை கொடுத்துள்ளார்.

நடிகர் திலகத்துக்கே வசன உச்சரிப்பில் வந்த சந்தேகம்.. சொல்லிக் கொடுத்த முஸ்லிம் பிரமுகர்

கிட்டத்தட்ட 50,000 பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகம், தேசிய விருது என பல விருதுகளுக்கும், சாதனைகளுக்கும் சொந்தக்காரராகத் திகழ்ந்தார் எஸ்.பி.பி. சாந்தி நிலையம் படத்தில் பாடிய பிறகு, எஸ்.பி.பிக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால் அவர் தெலுங்கில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சம்பளம் ரூ150-250 வரை தான்.

அதன்பிறகு ஆயிரம் நிலவே வா பாடலுக்காக முதன் முதலாக அவருக்குச் சம்பளமாக ரூ.500 கொடுக்கப்பட்டது. இதுகுறித்து எஸ்.பி.பி. பேட்டி ஒன்றில் கூறுகையில், “500 ரூபாய் செக்கை பார்த்தவுடன் எனக்கு தலை சுத்திடுச்சி. உடனடியாக நானும் என் நண்பன் முரளியும் சேர்ந்து ரயில்வே ஸ்டேஷன் போய்ட்டு குலாப்ஜாமுன், மசால்தோசை, டபுள் ஸ்ராங் காபி சாப்பிட்டு செலிபிரேட் செய்தோம். இந்த பணத்தின் மூலம் நான் இன்ஜினியரிங் படிக்கும்போது எங்க அப்படி மாதாமாதம் எனக்கு அனுப்பும் பணத்தை 7-8 மாதங்களுக்கு நிறுத்தி அவரின் செலவை மிச்சப்படுத்த முடிந்தது என்று எஸ்.பி.பி.ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தனக்கு முதன் முதலாக சம்பளமாக அதிகத் தொகை கிடைத்த மகிழ்ச்சியை இப்படிக் கொண்டாடியுள்ளார் இந்த பாடும் நிலா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...