அஜீத்துக்கு பாடிய பாட்டால் எஸ்.பி.பி-க்கு வந்த சிக்கல்.. அமர்க்களம் ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்

இன்று திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜீத்தை முதன் முதலில் பிரேம புஸ்தகம் தெலுங்குப் படத்திற்காக சிபாரிசு செய்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். ஏனெனில் அஜீத்தின் பள்ளி வகுப்புத் தோழர் எஸ்.பி.பி-யின் மகனான எஸ்.பி.பி.சரண் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவின் உச்ச நாயகனாக ஜொலிக்கிறார் அஜீத்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் அஜீத்துக்காக பல படங்களில் அவருக்குப் பின்னனி கொடுத்திருக்கிறார். மேலும் அவருக்கான முதல் பாடலான தாஜ்மஹால் தேவையில்லை… அன்னமே.. அன்னமே என்ற பாடலையும் பாடி அஜீத்தின் திரை வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த பங்காற்றியிருக்கார் எஸ்.பி.பி. மேலும் உல்லாசம் படத்தில் அவருக்குத் தந்தையாகவும் நடித்திருப்பார்.

அதிகாலை 4 மணிக்கு போன் செய்த கலைஞர்.. உடனடியாக பம்பரமாகச் சுழன்று வேலை செய்த இயக்குநர் விக்ரமன்.. எதற்கு தெரியுமா?

இந்நிலையில் அமர்க்களம் படத்திற்காக அஜீத்துக்காக அவர்பாடிய பாடல்தான் சப்தம் இல்லாத தனிமை கேட்டேன்.. யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் என்ற பாடல். கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி.பி. மூச்சுவிடாமல் பாடிய பாடலான மண்ணில் இந்த காதலன்றி பாடல் போல் இந்தப் பாடல் வேண்டும் என இயக்குநர் சரணும், இசையமைப்பளார் பரத்வாஜும் கேட்க, கேளடி கண்மணி பாடலைப்போல் ஹைபிட்சில் இந்தப் பாடலை மூச்சு விடாமல் பாடிக்கொடுத்தார் எஸ்.பி.பி. இருப்பினும் சில இடங்களில் ஏற்ற இறக்கத்துடன் பாடி ஆசுவாசப்படுத்திக் கொண்டாராம்.

இந்தப் பாடல் அந்தப் படத்தின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்தது. மேலும் இதே படத்தில் மேகங்கள் என்னைத்தொட்டுப் போனதுண்டு என்ற பாடலையும் பாடிருப்பார். ஆனால் இந்த இரண்டு பாடல்களும் இந்தப் படத்திற்காக எழுதப்பட்டது கிடையாதாம். வைரமுத்துவின் கவிதைத் தொகுப்புகளில் இருந்தவற்றை அப்படியே எடுத்து இசைகோர்த்து பாடலாக மாற்றியிருக்கின்றனர்.

இந்தப் பாடலைப் பாடி முடித்த பின் இசையமைப்பளார் பரத்வாஜிடம் எஸ்.பி.பி. “நீங்கள் இன்று இந்தப் பாடலை மூச்சுவிடாமல் பாடச் சொல்லி வாங்கிவிட்டீர்கள். ஆனால் எனக்குத்தான் அடுத்தடுத்து சிக்கல் என்றிருக்கிறார். என்னவென்று பரத்வாஜ் கேட்க, இந்தப் பாடல் கண்டிப்பாக ஹிட் ஆகும். இருப்பினும் இனி நான் எந்த இசைக்கச்சேரிக்குப் போனாலும் என்னை இந்தப் பாடலைப் பாடச் சொல்லி ரசிகர்கள் கேட்பார்கள்“ என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.

அவர் சொன்னது போலவே படம் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் சப்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் எஸ்.பி.பியின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Published by
John

Recent Posts