சூரரைப் போற்று பொம்மியை சூப்பரா பிடித்த தனுஷ்!.. ராயன் படத்தில் இணைந்த இன்னொரு வைரம்!..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் இயக்கத்தில் ராயன் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தனுஷ் இந்தப் படத்தை இயக்கி நடித்து வருகிறார். மொட்டை தலையுடன் தனுஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், அந்த போஸ்டரில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் இடம்பெற்று இருந்தனர்.

ராயன் படத்தில் இணைந்த அபர்ணா பாலமுரளி:

அதனைத் தொடர்ந்து ராயன் படத்தில் எஸ் ஜே சூர்யா இணைந்து அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அவரைத் தொடர்ந்து செல்வராகவன் மற்றும் பிரகாஷ் ராஜ் அந்தப் படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின.

மேலும், நேற்று தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படத்தில் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய துஷாரா விஜயன் இணைந்திருப்பதாக அறிவித்தனர். அடுத்து வரும் வேட்டையன் படத்திலும் துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட நடிகர்கள்:

இந்நிலையில் அவரைத் தொடர்ந்து சூரரைப் போற்று படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அபர்ணா பாலமுரளி ராயன் படத்தில் இணைந்துள்ள அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இன்னும் எத்தனை நடிகர்கள் நடிகைகள் தனுஷ் இயக்கத்தில் நடித்து வருகின்றனர் என்கிற ஆவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான், மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் உள்ளிட்ட படங்களுக்கும் ஏ.ஆர். ரகுமான் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப. பாண்டி படத்தை தனது தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் கடந்த 2017ம் ஆண்டு இயக்கி நடித்திருந்தார். அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2024ல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் படத்தை பிரம்மாண்டமாக தனுஷ் இயக்கி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் கதை தன்னுடையது அல்ல என்றும் இது தனுஷின் கனவு திரைப்படம் என செல்வராகவனும் சமீபத்தில் கதை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், ராயன் படத்தின் மூலம் தனுஷ் கம்பேக் கொடுப்பார் என தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...