பொழுதுபோக்கு

சூரரைப் போற்று டீமில் சூர்யாவுடன் இணையும் துல்கர் சல்மான், நஸ்ரியா!

தொடர் போரட்டங்களுக்கு பிறகு, கொரோனா சமயத்தில் ஓடிடியில் வெளியான படம் ‘சூரரைப்போற்று’. இந்தப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி தயாரித்தது.

சூர்யாவுடன், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தனர். குறைந்த விலையிலான விமான பயணத்தை மக்களுக்கு கொடுக்க முயற்சித்த ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

அவருடைய ‘simplifly deccan’ எனும் விமான சேவை பின் பல காரணங்களால் மூடப்பட்டது. ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்ய வசதியில்லாத தன்னுடைய ஊர் மக்கள் போன்றவர்களை கருத்தில் கொண்டு, குறைந்த விலையிலான விமான சேவை கொண்டு வர முயற்சித்தார்.

அப்படிப்பட்ட ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு மக்களுக்கு நிச்சயம் ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்பதை அறிந்து அதை திரைப்படமாக எடுத்து வெற்றி கண்டார் இயக்குனர் சுதா கொங்காரா. ஹாலிவுட்டில் இதுபோன்ற பயோகிராபிக் கதைகள் வந்திருந்தாலும், தமிழில் இது போன்ற கதைகள் புது வரவாகும். வாழ்க்கையில் வெற்றிக்காக காத்திருக்காமல், தொடர்ந்து போராடி வரும் பலருக்கும் இந்த படம் நல்ல ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும்.

இப்படி பல்வேறுபட்ட தரப்பினரின் ஆதரவைப் பெற்ற படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தினை எடுப்பதற்கான ஒப்பந்தத்தை 2019ல் கையெழுத்திட்டனர் படக்குழுவினர். படம் எடுத்து முடித்த சமயத்தில் கொரோனா உலகத்தையே முடக்கியது.

இதனால், படம் வெளிவருவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. கொரோனா லாக்டவுன் தொடர்ந்ததால், படம் தியேட்டருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், படத்தின் தயாரிப்பாளரான சூர்யா, துணிந்து படத்தை ஓடிடியில் வெளியிட்டார்.

ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘சூரரைப் போற்று’ சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது, அபர்ணா முரளிக்கு சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதைக்கு சுதா கொங்காராவுக்கு, ஜி.வி பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்று தந்தது.

இப்படி பல தேசிய விருதுகளை ‘சூரரைப் போற்று’ வென்றது. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து ‘புறநானூறு’ எனும் படத்தை உருவாக்க களம் இறங்கியுள்ளார். கூடுதல் போனஸாக இந்தப்படத்தில், சூர்யாவுடன், துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா நடிக்க உள்ளனர். இந்தப்படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

மக்கள் போரட்டம் தொடர்பான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் சூரரைபோற்று படத்தை போல உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டதா? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Published by
Nithila

Recent Posts