கிடப்பில் இருந்த சிவகார்த்திகேயன் படத்திற்கு புத்துணர்ச்சி கொடுத்த அஜித் பட விநியோகிஸ்தர்



சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் ஒன்று கடந்த பல மாதங்களாக முடங்கிக் கிடக்கின்றது. இந்த படத்திற்கு பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு மேற்கொண்டு தொடரவில்லை என்று கூறப்பட்டது

இந்த நிலையில் அஜித் நடித்த விஸ்வாசம் என்ற திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிட்டு பெரும் லாபம் பார்த்த கேஜேஆர் நிறுவனம் இந்த படத்தை மீண்டும் தொடங்க தற்போது முன்வந்துள்ளது

இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பில் கேஜேஆர் நிறுவனம் இணைந்துள்ளது என்பதால் இந்த படத்தை முழுவீச்சில் படப்பிடிப்பி நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு ஏஆர் ரஹ்மான் அவர்களால் அறிவிக்கப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
Staff

Recent Posts