மருத்துவமனை படுக்கையில் இருந்துகிட்டு எம்ஜிஆர் கேட்ட கேள்வி.. கண்ணீர் கடலில் நனைந்த சிவகுமார்..

தமிழ் திரையுலகம், அரசியல் என இரண்டிலும் மிக முக்கியமான ஒரு ஆளுமையாக விளங்கி இருந்தவர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவை இரண்டிலும் அவரைப் போல ஒரு சூப்பர் ஸ்டார் நிச்சயம் இனி வரவே முடியாது என கடந்த பல ஆண்டுகளாகவே அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருமே சூளுரைத்து வருகின்றனர்.

அது என்னவோ இதுவரைக்கும் நிஜமாகத்தான் இருந்து வரும் நிலையில் அவரைப் போல ஒரு சிறந்த மனிதர் உருவாக முடியாது என்றும் பலர் தெரிவிக்கின்றனர். இதற்கு மற்றொரு மிக முக்கிய காரணம், அரசியலுக்கு வந்தபின் முதலமைச்சரான எம்ஜிஆர் கடைகோடி மக்கள் வரையிலும் மிக சகஜமான ஒருவராக தான் பழகி இருந்தார். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கான சிறந்த நலத்திட்ட உதவிகளையும் செய்து மக்களின் நாயகனாகவும் இருந்து மறைந்த எம்ஜிஆர் பற்றி சிவகுமார் ஒரு பேட்டியில் தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் உருவான திரைப்படம் தான் காவல்காரன். இந்த படத்தை நீலகண்டன் இயக்கியிருந்த நிலையில் எம்ஜிஆரின் இளைய சகோதரனாக சிவகுமார் நடித்திருப்பார். அந்த சமயத்தில் சூட்டிங் ஸ்பாட்டின் இடைவேளைக்கு நடுவே, எம்ஜிஆரிடம் பேசும் வாய்ப்பு, சிவகுமாருக்கு கிடைத்துள்ளது. அப்போது, தனது தாய்க்கு கையில் அடிபட்டு ஆறு மாத காலம் வீட்டில் இருந்ததாகவும், தனக்கு தெரிந்தால் சினிமா வாழ்க்கை பாழாகி விடுமோ என தன்னிடம் மறைத்ததாக தனது சொந்தக் கதையை எம்ஜிஆரிடம் கூறியுள்ளார் நடிகர் சிவகுமார்.

அப்படி இருக்கையில் இந்த சம்பவம் முடிந்து சில மாதங்களுக்கு பிறகு தான் குண்டு காயம்பட்டு மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இது பற்றி சிவகுமாருக்கு செய்தி அறிந்ததும் உடனடியாக எம்ஜிஆரை பார்க்க வேண்டும் என்றும் நினைத்துள்ளார். மிகவும் கட்டுப்பாட்டுடன் தான் மருத்துவமனையில் எம்ஜிஆரை பார்க்க ஆட்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் காவல்காரன் படத்தை தயாரித்த வீரப்பன் அங்கே இருக்க அவரது உதவியுடன் எம்ஜிஆரை பார்க்கவும் உள்ளே சென்றுள்ளார் சிவகுமார்.

உள்ளே போனதும் ‘நீ சிவகுமார் தானே’ என்றும் எம்ஜிஆர் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்ததும் சற்று இன்ப அதிர்ச்சி அடைந்த சிவகுமார், வெகுசில மணி நேரம் தன்னுடன் செலவிட்ட பிறகும் எப்படி அவர் நினைவில் வைத்திருக்கிறார் என்பதும் ஆச்சரியமாக இருந்தது.

இந்த நிலையில் தான் எம்ஜிஆர் கேட்ட மற்றொரு கேள்வி சிவகுமாரை நிலைகுலைய வைத்திருந்தது. அதாவது காவல்காரன் படப்பிடிப்பில் தனது தாயின் கை பற்றி சிவகுமார் சொல்லியிருந்த நிலையில் அதனை சரியாக நினைவு வைத்து அம்மாவின் கை எப்படி இருக்கிறது என்று எம்ஜிஆர் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

அவர் அப்படி கேட்டதுமே என்ன சொல்வது என்று தெரியாமல் கண்ணீர் வடிய அங்கே நின்று கொண்டிருந்தாராம் நடிகர் சிவகுமார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...