பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனின் multiuniverse கான்செப்ட்..!! எந்த படம் தெரியுமா?

தற்போது தமிழ் சினிமாவில் வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களால் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதாக காணப்படுகிறது. அதுவும் டைரக்டர் லோகேஷ் கனகராஜை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் அவரை loki’s multiuniverse என பலரும் அழைக்கும் அளவிற்கு விக்ரம் திரைப்படத்தில் காட்சிகள் இணைக்கப்பட்ட காணப்படுகிறது. ஏனென்றால் அவர் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படத்தின் சிறுசிறு காட்சிகளும் படத்தில் இணைந்துள்ளதால் அவரை loki’s multiuniverse  என்று அழைக்கின்றார்கள்.

இந்த நிலையில் அவரை மிஞ்சும் அளவில் தனது ஆரம்ப காலகட்டத்திலேயே இளம் நடிகர் ஒருவர் இத்தகைய சாதனையை செய்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை தமிழகத்தில் தற்போது வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமான சிவகார்த்திகேயன் தான்.

ஏனென்றால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படத்தில் அவர் அவரின் முந்தைய படத்தின் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தது.

ரஜினி முருகன் திரைப்படத்தின் இறுதிகட்டத்தில் ராஜ்கிரணின் மற்றொரு பேரனாக வருக்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவரான போஸ் பாண்டி என்ற சிவகார்த்திகேயன்.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் அவரை மல்டியுனிவர்ஸ் கான்சப்ட் நடித்துள்ளார் என்று விமர்சனம் செய்து இணையத்தை கலக்கிக் கொண்டு வருகின்றனர்.

Published by
Vetri P

Recent Posts