படம் நல்லா இருந்தும் பார்க்க ஆள் வரலையே பாஸ்!.. சிவகார்த்திகேயன் முதல் சந்தானம் வரை செம நஷ்டம்!..

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நல்ல வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பல படங்கள் வெற்றியடைந்தன. இந்த ஆண்டு ஆரம்பமே பெரும் சொதப்பலாக மாறியுள்ளது.

சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதி நிலையில் அந்த இரண்டு படங்களும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தராமல் நஷ்டத்தை கொடுத்ததாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் வெளியாகின. மிஷின் பார்ட்-1 மற்றும் விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் படங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

ஓடிடியால் உதைவாங்கும் படங்கள்:

அதைப்போல அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் மற்றும் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களும் பார்க்க நல்லா இருந்தாலும் படம் பார்க்க தியேட்டருக்கு ஆட்கள் வருவதில்லை என்கிற கவலையில் காட்சிகள் குறைக்கப்பட்டு வசூலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

கடைசியாக கடந்த வாரம் வெளியான சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படமும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு ஆட்கள் வரவில்லை என்பதுதான் நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நிசம் என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

தியேட்டர்கள் நிலைமை ரொம்ப மோசம்:

ஏசிக்கு கரண்ட் பில் கட்டவே காசு போதவில்லை என்றும் பல காட்சிகள் அதன் காரணமாக நிறுத்தப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் ரசிகர்களை தொடர்ந்து தியேட்டருக்கு வரவைக்க வேண்டும் என்பதற்காக பிளாக்பஸ்டர் என்றும் சக்சஸ் மீட் என்றும் வித்தைக் காட்டி வருகின்றனர். ஆனால் உண்மையான நிலவரம் என்னவென்றால் ஓடிடியில் நான்கு வாரங்களிலேயே படம் வெளியாகி விடும் நிலையில், 2 வாரங்களில் ஹெச்.டி. தரத்தில் திருட்டு பிரிண்டுகள் அதிகமாக உலா வருகின்றன.

சிவகார்த்திகேயன் முதல் சந்தானம் படம் வரை:

அயலான், சபா நாயகன், கேப்டன் மில்லர் படங்கள் இன்னமும் ஓடிடியில் வெளியாகாத நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பே அதன் திருட்டு பிரின்ட்டுகள் டெலிகிராம் சேனலில் சோசியல் மீடியாவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு ரிலீஸ் செய்து வருகின்றனர்.

இந்த வாரம் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்தால் தான் உண்டு என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள அந்த படத்திலேயே ரஜினிகாந்த் கேமியோ ரோல் தான் என்பதால் அவரது போர்ஷன் குறைவான அளவில் இருந்தால் படத்தை அது எந்த வகையிலும் காப்பாற்றுமா என்பது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர்.

சம்மருக்கு விடாமுயற்சி, கங்குவா, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியானால் தான் தியேட்டருக்கு ரசிகர்களை கொண்டுவர முடியும் என்றும் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.