பொழுதுபோக்கு

தனுஷை வீழ்த்தப் போகிறாரா சிவகார்த்திகேயன்!.. ஜெட் வேகத்தில் முன்னேறும் அயலான்.. பொங்கல் வின்னர் யாரு?

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் பார்ட்-1 மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட நான்கு படங்கள் வெளியாகின.

இதில், முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது தனுஷின் கேப்டன் மில்லர் தான். அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் படமாக வெளியான அயலான் திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் மெரி கிறிஸ்துமஸ் மற்றும் நான்காவது இடத்தில் அருண் விஜய் நடித்த மிஷன் பார்ட் ஒன் படங்கள் உள்ளன.

கேப்டன் மில்லர் vs அயலான்:

ஆனால், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், குடும்பத்துடன் அயலான் படத்தைப் பார்க்கவே மக்கள் அதிக ஆர்வத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். அதன் விளைவு இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸில் கேப்டன் மில்லரை விட சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்கு வசூல் ரீதியான முன்னேற்றம் இருப்பது காணமுடிகிறது.

பொங்கலை முன்னிட்டு வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் எந்தவொரு சுவாரஸ்யமான கதையும் இல்லாமல் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நாயகன் தனுஷ் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொண்டே இருக்கிறார். கடைசியில் ஊர் மக்களை கோயிலுக்குள் நுழைய ராஜா குடும்பத்தையே போட்டுத் தள்ளுகிறார்.

2ம் நாள் வசூலில் முன்னேறிய அயலான்:

அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை குடும்பத்துடன் பார்க்க முடிகிறது. முதல் பாதி முழுவதும் ஏலியன், சிவகார்த்திகேயன், யோகி பாபு மற்றும் கருணாகரன் பண்ணும் காமெடி மற்றும் இரண்டாம் பாதியில் சிவகார்த்திகேயன் மற்றும் ஏலியன் இணைந்து எதிரியை அழிக்க ஆக்‌ஷனில் மிரட்டுவது என அயலான் படம் நகர்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகள் பழக்கப்பட்ட ஒன்று தான் என்பதால் இரண்டாம் பாதி மற்றும் படம் ஆரம்பிக்கும் நேரத்தில் கொஞ்சம் தொய்வு உள்ளது.

இந்த இரண்டு படத்தில் தரமான மேக்கிங்கை பார்க்க நினைப்பவர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்கள் கேப்டன் மில்லருக்கு சென்று வருகின்றனர். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் பொங்கலுக்கு ஜாலியாக ஒரு படத்தை பார்க்க நினைப்பவர்கள் அயலானை பார்த்து வருகின்றனர்.

2 நாட்களில் கேப்டன் மில்லர் திரைப்படம் 23 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் அயலான் 19 கோடி ரூபாய் உடன் தனுஷ் படத்தை நெருங்கி வருகிறது. இன்னும் உள்ள 4 நாட்கள் பொங்கல் விடுமுறையில் கேப்டன் மில்லரை அயலான் முந்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
Sarath

Recent Posts