சிவகார்த்திகேயனுக்கு சம்பளமே கொடுக்காத அயலான் பட தயாரிப்பாளர்.. கடைசியா போட்டு உடைச்சிட்டாரே!

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

அயலான் படத்தின் புரமோஷனுக்காக  யூடியூப் சேனல்களுக்கு சிவகார்த்திகேயன் பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் சிவகார்த்திகேயனை சின்னி ஜெயந்த் பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில், அயலான் படத்தில் நடித்ததற்காக தான் சம்பளமே வாங்கவில்லை என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் பேட்டி:

பணம் நெருக்கடி காரணமாக பல ஆண்டுகளாக அந்த படத்தின் ரிலீஸ் மற்றும் படப்பிடிப்பு தள்ளிப்போய் வந்த நிலையில், ஒருவழியாக அனைத்தையும் சரி செய்து அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிடும் முடிவுக்கு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக வழக்கு வரை தொடுத்திருந்தார். தமிழ்த்திரை உலகில் அந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த தயாரிப்பு நிறுவனத்திடம் சம்பளம் எதுவும் வாங்காமல் தான் நடித்ததாக சிவகார்த்திகேயன் தற்போது கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படம் அயலான் படம் படம் ஒரு கனவு படம் அந்தப் படத்தை உருவாக்க வேண்டுமென்றால் படம் வேண்டுமா சம்பளம் வேண்டுமா என்கிற கேள்வி என் முன்னிலையில் வைக்கப்பட்டது. படந்தான் முக்கியம் என சொல்லி சம்பளத்தை வேண்டாம் என சொல்லிவிட்டதாக சிவகார்த்திகேயன் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

சம்பளம் வேண்டாம்னு சொல்லிட்டேன்:

இது மட்டுமின்றி, இசையமைப்பாளர் டி. இமான் குறித்த சர்ச்சைகள் தொடர்பான கேள்விகளுக்கும் சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இளமையான தோற்றத்தில் செம சார்மிங்கான லுக்கில் சிவகார்த்திகேயன் பேட்டி அளித்ததை ரசிகர்கள் மட்டுமின்றி அவரது தீவிர ரசிகைகளும் கண்டு ரசித்து வருகின்றனர்.

அயலான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் என்ன பேசப் போகிறார் என்பதையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நேரலையாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. வரும் புத்தாண்டை முன்னிட்டு சன் டிவியில் ஸ்பெஷல் ஷோவாக ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.