கருப்பு வெள்ளைப் படங்களில் வசூல் சாதனையில் மிரள வைத்த சிவாஜி படம்.. ஆத்தாடி மனுஷன் இப்படி நடிச்சிருக்காரே..!

சிவாஜி என்னும் மாபெரும் கலைஞன் சாதிப்பதற்காகவே இந்த மண்ணில் அவதரித்திருக்கிறார் போலும். தான் தேர்ந்தெடுத்த சினிமா துறையில் அத்தனை சாதனைகள். நாடக மேடைகளில் தோன்றி டிஜிட்டல் வரை நடிப்பில் பட்டையைக் கிளப்பியவர். அந்தக் காலப் படங்களில் வசூல் சாதனைப் படம் எதுவென்று கேட்டால் சட்டென ஞாபகத்திற்கு வருவது திரிசூலம் திரைப்படம் தான். அதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் எந்தவொரு படமும் அவ்வளவு வசூலை ஈட்டியதில்லை. மேலும் உலகன் சுற்றும் வாலிபன் படத்தின் சாதனையை முறியடித்தது.

ஆனால் கருப்பு வெள்ளைப் படத்தில் நான்தான் கிங் என்பது போல சிவாஜிகணேசன் நடிப்பில் மிரட்டி வசூலை அள்ளிக் குவித்த திரைப்படம் தான் பட்டிக்காடா பட்டணமா. முதன் முதலில் வசூலில் ஒருகோடியைத் தொட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. இந்தப் படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது.

மதுரை மண் சார்ந்த மாந்தர்களின் வாழ்வியலை ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்திய கருப்பு வெள்ளை காவியம் நடிகர் திலகம் – பி.மாதவன் பாலமுருகன் கூட்டணியில் உருவான ‘பட்டிக்காடா பட்டணமா’.

சென்னையில், சிவாஜியை காரிலேற்றிக்கொண்டு, ஒவ்வொரு இடமாகக் காட்டி அடிப்பார்கள். ‘இதான் எல்.ஐ.சி’ என்று ஒரு அடி. ‘இதான் சாந்தி தியேட்டர்’ என்று ஒரு அடி. பிறகு சிவாஜி அடிக்கும் போது, ‘சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா?’ என்று வெளுப்பார். அட்டகாசமான கிராமத்துப் படமாக, அழகான குடும்பப்படமாக, பிரமிக்க வைக்கும் சிவாஜி படமாக, வியக்கவைக்கும் பி.மாதவன் படமாக வந்து பட்டையைக் கிளப்பியது ‘பட்டிக்காடா பட்டணமா’.

“உன் படத்துக்கு மியூசிக் போட மாட்டேன் போ..“ முதல் படத்திலேயே பார்த்திபனை நிராகரித்த இளையராஜா.. காரணம் இதான்

இன்றைக்கும் ‘பட்டிக்காடா பட்டணமா’வையும் சோழவந்தான் ‘மூக்கையா சேர்வை’யையும் முக்கியமாக ‘என்னடி ராக்கம்மா’ பாடலையும் இந்தத் தலைமுறை ரசிகர்களும் மறக்கவே இல்லை. மூக்கையாவாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அள்ளி முடித்த கொண்டை முடியும் கடுக்கணும் அணிந்து அசல் சோழவந்தான் கிராமத்தானின் உடல்மொழியை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பார்.

முதலிரவன்று மனைவியுடன் ‘கேட்டுக்கோடி உறுமி மேளம்’ பாடலுக்கு அவர் ஆடும் நடனம் இருக்கிறதே அது வேற லெவல். தமிழ் திரைப்பட குத்து பாடல்களில் தனியிடம் பிடித்த ‘என்னடி ராக்கம்மா’ பாடலுக்கு அவரின் உடல் அசைவுகள் குறிப்பாக கேமராவுக்கு முதுகைக் காண்பித்துக் கொண்டே இசைக்கேற்றவாறு அவர் பின்புறம் கால்களை உயர்த்தி ஆடும் நடன அசைவுக்கு பலத்த கைதட்டல்கள் விழும்.

மனைவியை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர முகேஷ் என்கிற கெட்டப்பில் வரும்போது அட்டகாசம் செய்வார். தானும் படித்தவன்தான் என்பதை ஆங்கிலத்தில் மனைவியுடன் பேசும்போது கூட மொழி ஒரு நாகரீக சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்குதான் என்பதை உணர்த்துவார்.

ஒரு வீதிக்கே ஏ.ஆர். ரஹ்மான் பெயர்.. கனடாவிலும் தமிழன் பெருமையை நிலைநிறுத்திய இசைப்புயல்

‘லண்டன் ரிட்டர்ன்’ நாகரீக நங்கையாக கலைச்செல்வி ஜெயலலிதா. அவரது கதாபாத்திரத்திற்கு ஒரு வித்தியாச பூச்சு தரப்பட்டிருக்கும். வெறும் ஆணவம் மட்டுமல்லாமல் அத்தை மகன் மேல் அன்பு, அவரின் வீரம், கண்ணியம் இவையெல்லாம் அவர் மேல் ஒரு ஈர்ப்பை உருவாக்குவதை இயல்பாக வெளிப்படுத்துவார். அவரின் கல்பனா கதாபாத்திரம் பிலிம் பேர் இதழின் சிறந்த நடிகை விருதை அவருக்குப் பெற்று தந்தது.

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை படங்களின் வரலாற்றில் அதிக பட்ச வசூலை பெற்ற ‘பட்டிக்காடா பட்டணமா’ பல இடங்களில் வெள்ளிவிழா கண்டு சாதனைப் படமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

Published by
John

Recent Posts