நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் பொங்கல் அன்று வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை!

பொதுவாக விசேஷ நாட்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்துவது வழக்கம்தான். அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படங்கள் குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் சிவாஜி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான முதல் திரைப்படம் பரதேசி. இது ஒரு தெலுங்கு திரைப்படம் ஆகும்.இந்த படத்தில் நடிகர் சிவாஜி உடன் இணைந்து நாகேஸ்வரராவ் நடித்திருப்பார். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 12ஆம் தேதி 1953 ஆம் வருடம் வெளியானது. அதை அடுத்து சிவாஜி நடிப்பில் அடுத்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் காவேரி. இந்த திரைப்படம் 13ம் தேதி 1955 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அடுத்த ஆண்டான 1956 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகி இருந்தது. அதில் ஒன்று நான் பெற்ற செல்வம் மற்றொன்று நல்ல வீடு. இந்த இரண்டு திரைப்படங்களும் பொங்கலை முன்னிட்டு 14ஆம் தேதி வெளியாகியிருந்தது.

அடுத்ததாக சிவாஜி நடிப்பில் வெளியான பொங்கல் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 1957ஆம் ஆண்டு 11ஆம் தேதி வெளியானது. பொம்மாலா பெல்லி என்னும் தெலுங்கு திரைப்படம் பதினொன்றாம் தேதி 1958 ஆம் ஆண்டு அடுத்த பொங்கலை முன்னிட்டு வெளியானது. அதை அடுத்து சிவாஜி நடிப்பில் வெளியான பொங்கல் ரிலீஸ் திரைப்படம் தங்கப்பதுமை. இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 1959 ஆம் ஆண்டு பத்தாம் தேதி வெளியானது. பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. ஜெமினி ஸ்டூடியோவின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியான இரும்புத்திரை திரைப்படம் 1960ல் பொங்கல் வெளியீடாக வெளிவந்தது. இந்த படத்தை அடுத்து சிவாஜி நடிப்பில் பார்த்தால் பசி தீரும் திரைப்படம் 1962 ஆம் ஆண்டு 14ஆம் தேதி வெளியாகியிருந்தது.

நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் மிகப் பிரமாண்டமாக பொருட்செலவில் புராண கதையை மையமாக வைத்து உருவான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் 1964 ஆம் ஆண்டு 14ஆம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அடுத்த ஆண்டு 1965இல் சிவாஜி நடிப்பில் பழனி திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து 1967இல் சிவாஜி நடிப்பில் கந்தன் கருணை திரைப்படம் 14ஆம் தேதி வெளியாகியிருந்தது. அடுத்து மூன்று வருட இடைவெளிக்கு பின் 1970 இல் சிவாஜி நடிப்பில் எங்க மாமா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி இருந்தது. அதை அடுத்து அடுத்த வருடம் 1971 ஆம் ஆண்டு சிவாஜி நடித்த இரு துருவம் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 14ஆம் தேதி வெளியாகியிருந்தது.

அடுத்த சிவாஜி நடிப்பில் உங்களை முன்னிட்டு 1975 ஆம் ஆண்டு மனிதனும் தெய்வமாகலாம் திரைப்படம் பதினொன்றாம் தேதி வெளியாகியிருந்தது. அடுத்து சிவாஜி நடிப்பில் அவள் ஒரு சரித்திரம் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 1977 ஆம் ஆண்டு 14ஆம் தேதி வெளியாகியிருந்தது. அடுத்து மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் சிவாஜி நடிப்பில் மோகன புன்னகை திரைப்படம் 1981 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. சிவாஜி நடிப்பில் அடுத்து வெளியான தெலுங்கு திரைப்படம் பெஜவாடா பிபிலி. இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 1983 ஆம் ஆண்டு 14ஆம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் பிரபு இருவரும் இணைந்து நடித்த திருப்பம் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 1984 ஆம் ஆண்டு 14ஆம் தேதி வெளியாகியிருந்தது.

எம்ஜிஆரின் சொந்த தயாரிப்பில் உருவான நான்கு திரைப்படங்கள்! வெற்றியா? தோல்வியா?

அடுத்த ஒரு ஆண்டு இடைவேளைக்கு பின் மீண்டும் சிவாஜி கணேசன் மற்றும் பிரபு இணைந்த சாதனை திரைப்படம் 1986 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு பத்தாம் தேதி வெளியாகியிருந்தது. அடுத்து 1987 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் ராஜமரியாதை. அடுத்து சில ஆண்டுகள் இடைவேளைக்குப்பின் சிவாஜி கணேசன் நடிப்பில் ஞான பறவை திரைப்படம் 1991 ஆம் ஆண்டு பொங்கல் முன்னிட்டு வெளியாகி இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் இறுதியாக வெளியான பொங்கல் திரைப்படம் மன்னவரு சின்னவரு. இந்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டு 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...