விஜயகாந்தை மறந்து போன சிவாஜி.. இருந்தாலும் கேப்டனின் அந்த மனசு இருக்கே..!

திரைத்துறையில் எத்தனையோ நடிகர் நடிகைகள் பல படங்களில் ஒன்றாகக் சேர்ந்து நடித்து பின் அடுத்த படங்களில் அடுத்த டீமுடன் நடிக்கச் சென்று விடுகின்றனர். இதனால் கலைஞர்களுக்குள் ஆழமான நட்பு பெரும்பாலும் இருக்காது. மேலும் உடன் நடித்த நடிகர், நடிகைகளையும் காலப்போக்கில் மறந்து விடுவர். அப்படி ஒரு சம்பவம் கேப்டன் விஜயகாந்துக்கும் நடந்துள்ளது. இவரை மறந்தவர் வேறு யாருமல்ல எத்தனை பக்கம் வசனம் கொடுத்தாலும் நினைவில் நிறுத்தி அசால்ட்டாக ஊதித் தள்ளும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.

ஒருமுறை விஜயகாந்தை ஞாபகமில்லை எனக் கூறியிருக்கிறார் சிவாஜி கணேசன். அப்போது நடிகர்திலகம் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வெளிநாட்டில் சிகிச்சை முடிந்து திரும்பவும் நடிக்க வந்தார். ‘நாங்கள்‘ என்று ஒரு படத்திற்காக ஏவிஎம் கார்டனில் டப்பிங் பேசினார். அதே நேரம் ‘சத்ரியன்‘ படத்திற்காக விஜயகாந்த், சுபாஷ் என எல்லாரும் அந்த செட்டில் இருந்தனர். அப்போ ஒருவர் வந்து நடிகர் திலகம் அங்கு வந்து இருப்பதை சொல்ல, விஜயகாந்த் அவரைப் பார்க்கத் துடித்தார்.உடனே அங்கு சென்றார். அங்கு சுபாஷ் சிவாஜியின் காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினார். அதன்பிறகு விஜயகாந்தும் வாங்கினார்.

அப்போது அங்கு இருந்த பிரபு ‘அப்பா கூட நீங்க நடிச்சிருக்கீங்கள்லன்னு’ கேட்டாரு பிரபு. ஆமா வீரபாண்டியன்னு ஒரு படத்துல நடிச்சிருக்கேன். உடனே பிரபு சிவாஜிகிட்ட ‘வீரபாண்டியன்ங்கற படத்துல நீங்களும், அவங்களும் சேர்ந்து நடிச்சீங்களாமேன்னு’ கேட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல ஜெமினில்ல எங்கூட நடிச்சான்னு சிவாஜி சொன்னாரு. ஏனெனில் அந்த சமயம் அவருக்கு ஞாபகசக்தி குறைவா இருந்த காலகட்டம். விஜயகாந்த் நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு பரவாயில்ல… பரவாயில்லன்னு சொன்னாரு.

“எனக்கு மொட்டை மாடி போதும்..“ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த செயல்.. நெகிழ்ந்து போன எஸ்.பி.முத்துராமன்

ஆனால் நடிகை லட்சுமி டப்பிங் பேசிட்டு வர்றாரு. அதைப் பார்த்ததும் சிவாஜி ‘வாடி லட்சுமி’ங்கறாரு. என்ன இங்க வந்துருக்க? சூட்டிங்கா? டப்பிங்கா?ன்னு கேட்குறாரு. லட்சுமியை கரெக்டா அடையாளம் தெரியுது. பல படங்கள்ல சிவாஜியோடு நடிச்சிருக்காங்க. அப்போது விஜயகாந்துடன் இருந்தவங்க ‘ உங்கள யாருன்னு தெரியல. நடிகைய மட்டும் கரெக்டா ஞாபகம் வச்சிருக்காரு’ன்னு சொல்ல, அதற்கு விஜயகாந்த், இந்த ஞாபகசக்தி சிலபேரை அடையாளம் வச்சிருக்கும். அதனால குறை சொல்லாதீங்க. அந்த அம்மா அவரு கூட நிறைய படம் நடிச்சிருப்பாங்க. நானோ ஒரே படம் தான். அதனால என்னை அவரால ஞாபகத்துல வச்சுக்க முடியல என்றார் விஜயகாந்த்.

நடிகர் திலகம் சிவாஜியும், விஜயகாந்தும் ஒரே ஒரு படத்தில் தான் இணைந்து நடித்துள்ளார்கள். அது 1987ல் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான வீரபாண்டியன். இந்தப்படத்தில் விஜயகாந்த் மணிமாறனாகவும், சிவாஜி பாண்டியாகவும் வருவார். ராதிகா, சுமித்ரா, ஜெய்சங்கர், ராதாரவி, வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...