சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!

சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்த ‘நவராத்திரி’ மற்றும் எம்ஜிஆர் 9 பெண்களை சந்திக்கும் ‘நவரத்தினம்’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் புராண படங்களை இயக்குவதில் ஏ.பி.நாகராஜன் பிரபலமாக இருந்தார். அவரது புராண படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாகியது. ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘திருவருட்செல்வர்’, ‘திருமால் பெருமை’ ஆகிய சிவாஜி கணேசன் நடித்த சூப்பர் ஹிட் புராண படங்களை ஏ.பி.நாகராஜன் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் நடித்த ஒருவர் கூட மேக்கப் போட்டு நடிக்கவில்லை.. இப்படி ஒரு சிவாஜி கணேசன் படமா?

இந்த நிலையில் எம்ஜிஆரை வைத்து அவர் இயக்கிய ஒரே படம் ‘நவரத்தினம்’. இதுதான் அவரது கடைசி படம். சிவாஜியை வைத்து ஏற்கனவே ‘நான் பெற்ற செல்வம்’, ‘மக்களை பெற்ற மகராசி’, ‘பாவை விளக்கு’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய ஏ.பி.நாகராஜன் ‘வடிவுக்கு வளைகாப்பு’ என்ற படத்தை முதன்முதலாக இயக்கினார்.

அதன் பிறகு ‘குலமகள் ராதை’ படத்தை இயக்கிய அவர், அதன் பிறகு ‘நவராத்திரி’ படத்தை இயக்கினார். இதுதான் சிவாஜியின் நூறாவது படம்.

இந்த படத்தில் நாயகி சாவித்திரி, சிவாஜியை காதலிப்பார். ஆனால் அவரது வீட்டில் வேறொரு மாப்பிள்ளையை பார்க்க, அதனால் வீட்டை விட்டு வெளியேறி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான நபரை சந்திப்பார். அவர் சந்திக்கும் எட்டு நபர்களும் சிவாஜிதான். சாவித்திரியின் காதலரை சேர்த்து மொத்தம் ஒன்பது கேரக்டரில் சிவாஜி இந்த படத்தில் நடித்திருப்பார்.

அதன் பிறகு 9 நாள் முடிந்த பிறகு சாவித்திரி வீட்டுக்கு வந்த போதுதான், அவருக்கு பார்த்த மாப்பிள்ளை அவரது காதலர்தான் என்பதை அறிந்து கொள்வார். அதன் பிறகு அவர் திருமணத்திற்கு சம்மதிப்பார். இந்த திருமணத்திற்கு சாவித்திரி சந்தித்த 8 சிவாஜி கேரக்டர்களில் 7 பேர் வந்திருப்பார்கள். ஒரு கேரக்டர் சாவித்திரி முன் இறந்துவிடும் வகையில் கதை அமைந்திருக்கும். எனவே இந்த படத்தின் கடைசி காட்சியில் ஒரே ஷாட்டில் 8 சிவாஜியும் இருப்பார்கள்.

சிவாஜியின் நூறாவது படமாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூலிலும் சாதனை செய்தது. கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ என்ற திரைப்படம் வரும் வரையில் இந்த படம் தான் ஒரு நடிகர் அதிக கேரக்டரில் நடித்த தமிழ் படமாக இருந்தது.

இந்த நிலையில்தான் சிவாஜியை வைத்து பல படங்கள் இயக்கியுள்ள ஏ.பி.நாகராஜன், எம்ஜிஆரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அது கிட்டத்தட்ட நவராத்திரி மாதிரியே இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

‘நவராத்திரி’ படத்தில் சாவித்திரி வீட்டை விட்டு வெளியேறியது போல் ‘நவரத்தினம்’ படத்தில் எம்ஜிஆர் வீட்லிருந்து வெளியேறுவார். ‘நவராத்திரி’ படத்தில் சாவித்திரி ஒன்பது குணம் கொண்ட ஆண்களை சந்திக்கும் நிலையில் எம்ஜிஆர் 9 குணங்களை கொண்ட பெண்களை சந்திப்பார். அவர்களில் லதா, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, ஒய்.விஜயா, ஜெயசித்ரா ஆகியோர்களும் உண்டு.

இந்த படம் கடந்த 1977ஆம் ஆண்டு ரிலீஸான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியான ஒரு சில மாதங்களில் ஏ.பி.நாகராஜன் உடல்நல குறைவால் காலமானார். இந்த படம் தான் அவருடைய கடைசி படமாக அமைந்தது என்பதும் ஒரு சோகமான தகவல் ஆகும்.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

சிவாஜியை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன், எம்ஜிஆரை வைத்து ஒரே ஒரு படமாவது இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை பூர்த்தி செய்த நிலையில் அந்த படமே அவரது கடைசி படமாக அமைந்தது.

Published by
Bala S

Recent Posts