படப்பிடிப்பின்போது நூலிழையில் உயிர் தப்பிய சிவாஜி.. ஸ்ரீதரின் முதல் புரட்சிப்படம் சிவந்தமண்..!!

சிவாஜி கணேசனை ஒரு ஆக்சன் ஹீரோவாகவும் ஒரு புரட்சியாளராகவும் நடிக்க வைத்த பெருமை இயக்குனர் ஸ்ரீதருக்கே உண்டு. அதுதான் சிவந்த மண் திரைப்படம். கடந்த 1969 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சிவந்தமண் திரைப்படம் வெளியானது. சிவாஜி கணேசன், முத்துராமன், நம்பியார், எஸ்வி ரங்காராவ், ஜாவர் சீதாராமன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், காஞ்சனா, சாந்தகுமாரி, சச்சு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ஸ்ரீதர் இயக்கத்தில் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழகத்தின் பல நகரங்களில் இந்த படம் 100 நாட்கள் ஓடி சாதனை செய்தது.  சமூக படங்களில் அதிகமாக நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் முதல் முதலாக ஒரு புரட்சிகரமான படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்காக பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டது.

அது மட்டும் இன்றி இந்த படத்தின் பாதி காட்சிகளுக்கு மேல் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. போர்ச்சுலாந்து கப்பலின் உள்வடிவத்தை அப்படியே ஒரு செட்டாக போட்டிருந்தார்கள். அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஒரு செயற்கை ஆற்றையே உருவாக்கி அந்த ஆற்றுக்காக இரண்டு லட்சம் கேலன் தண்ணீர் நிரப்பப்பட்டது.

இந்த முகம் ஹீரோவுக்கு செட்டே ஆகாது… தவறான சிவாஜியின் கணிப்பு !

sivandhaman2

பிரம்மாண்டத்தில் மட்டுமின்றி திரைக்கதையிலும் வித்தியாசத்தை கொடுத்து இருப்பார் ஸ்ரீதர். இந்த படத்தின் பல காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும். கடலில் நீந்தி சென்று கப்பலுக்கு குண்டு வைக்கும் காட்சி, ரயிலில் குண்டு வைக்க இரும்பு தூண்களின் மேல் நடக்கும் காட்சி ஆகியவை ரசிகர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் இந்த படத்தில் திவானை கொல்வதற்காக ஒரு நாடகம் நடத்துவார்கள். அந்த நாடகத்தின் போது நடனமாடும் பெண்ணை சவுக்கால் அடிக்க வேண்டும். 15வது முறையாக சவுக்கால் அடிக்கும்போது திவானை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று திட்டமிடுவார்கள். ஆனால் அந்த திட்டத்தில் திடீரென ஏற்படும் திருப்பம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கும்.

மேலும் இந்த படத்தில் நிஜ ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தி இருப்பார்கள். புரட்சிக்காரர்களை கொல்வதற்காக இராணுவம் சுடும் காட்சியை படமாக்கப்பட்ட போது தான் சிவாஜியின் மிக அருகில் அந்த ராணுவ ஹெலிகாப்டர் வரும். ஒரே ஒரு அடி மட்டுமே வித்தியாசம் இருந்த நிலையில் சிவாஜி ஒரு பள்ளத்தில் குதித்து நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அன்றைய காலத்தில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது.

மேலும் வெளிநாடுகளில் ஏராளமான காட்சிகள் இந்த படத்திற்காக படமாக்கப்பட்டது. குறிப்பாக பாரீஸ் ஈபிள் டவர், இத்தாலி ரோம் நகரம், ஸ்பெயின் நாட்டின் காளையை அடக்கும் விளையாட்டுகள் ஆகியவை இதற்கு முன் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்ததே இல்லை. இந்த படத்தில் தான் முதல் முதலாக பார்த்தார்கள் என்று கூறலாம்.

ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல.. 17 முறை ஒரே நாளில் வெளியான சிவாஜியின் இரண்டு படங்கள்.. பெரும் சாதனை..!

sivandhaman1

இந்த படத்தில் சர்வாதிகாரி திவான் கேரக்டரில் நம்பியார் நடித்திருப்பார். அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள் குவிந்தது. சிவந்த மண் திரைப்படம் தமிழகத்தில் உள்ள 32 திரையரங்குகளில் 50 நாட்களும் ஒன்பது திரையரங்களில் 100 நாட்களும் சென்னையில் 21 வாரங்களும் ஓடி வெற்றி பெற்ற படம் ஆகும். இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி கணேசன் நடித்த கேரக்டரில் ஹிந்தியில் ராஜேந்திரகுமார் நடித்த நிலையில் அங்கும் இந்த படம் வெற்றி பெற்றது.

சிவாஜி – இளையராஜா இணைந்த முதல் படம்.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?

எம்எஸ் விஸ்வநாதன் இசையில் இந்த படத்தில் ஆறு பாடல்கள் உண்டு. அதில் ஒரு ராஜா ராணியிடம் என்ற பாடலும், பட்டத்து ராணி என்ற பாடலும் இன்றளவும் பிரபலம். மொத்தத்தில் சிவாஜி கணேசனை வைத்து ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை எடுத்ததோடு, இந்த படத்தில் புரட்சிகரமான பல கருத்துக்களையும் ஸ்ரீதர் கூறியிருந்தார். அதுவரை குடும்பப்பாங்கான மற்றும் காதல், நகைச்சுவை படங்கள் எடுத்துக்கொண்டிருந்த ஸ்ரீதர் முதல் முதலாக ஒரு பெரிய பட்ஜெட்டில் எடுத்த புரட்சி படம் தான் சிவந்தமண். இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...