இந்தியா-சீனா போர் நடந்த படம்… சிவாஜியை ஏமாற்றிய நாயகி… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்..!!

இந்தியா – சீனா போர் 1962 ஆம் ஆண்டு நடந்த நிலையில் இது குறித்த கதை அம்சம் கொண்ட திரைப்படம் தான் 1963ஆம் ஆண்டு வெளியான ரத்தத் திலகம். சிவாஜி கணேசன், சாவித்திரி, நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தை தாதாமிராசி இயக்கியிருந்தார்.

கதை வசனம் பாடல்கள் கண்ணதாசன் எழுதினார். அதில் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பனி படர்ந்த, பசுமை நிறைந்த நினைவுகளே, தாழம் பூவே தங்க நிலாவே போன்ற பாடல்கள் எந்த காலத்திலும் இனிமையாக கேட்கும் வகையில் இருக்கும்.

இந்த படத்தில் சிவாஜி மற்றும் சாவித்திரி ஆகிய இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பார்கள். முதலில் சிவாஜியை வெறுக்கும் சாவித்திரி ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து கல்லூரியில் நடக்கும் நாடகத்தில் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் தான் சிவாஜிகணேசன் ஆங்கில வசனம் பேசி நடித்திருப்பார்.

இந்த நாடகத்தில் நடித்த பின்னர் தான் சிவாஜி மீது சாவித்திரிக்கு காதல் ஏற்படும். இந்த நிலையில் தன்னுடைய குடும்பம் சீனாவில் இருக்கிறது என்பதால் அங்கு செல்ல வேண்டும் என்று சாவித்திரி கிளம்பி செல்வார். அப்போது தான் திடீரென இந்தியா சீனா இடையே போர் தொடங்கும்.

ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!

raththa thilagam 1

சிவாஜி கணேசன் இந்திய ராணுவத்தில் இணைந்து போரில் ஈடுபடுவார். அப்போது சீன ராணுவத்தில் சாவித்திரி இணைந்து போரிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைவார். அதுமட்டுமின்றி அவர் சீன ராணுவ மேஜர் ஒருவரையும் சாவித்ரி திருமணம் செய்து கொண்டிருப்பதை கண்டுபிடிப்பார்.

தன்னுடைய காதலுக்கு துரோகம் செய்துவிட்டு எதிரி நாட்டு ராணுவ மேஜரை சாவித்திரி திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த சிவாஜி அவரை பழிவாங்க நினைப்பார். இந்த நிலையில் தான் ஒரு திடுக்கிடும் திருப்பம் ஏற்படும்.
சீனாவில் தன்னுடைய தந்தை சீனர்களால் கொல்லப்பட்டதை அறிந்த சாவித்திரி சீனர்களை பழிவாங்க நினைப்பார்.

வளையல் கடைக்காரரில் இருந்து ஹீரோ வரை… பாரதிராஜா அறிமுகப்படுத்திய பாண்டியன்…!!

அதற்காக  சீனாவின் ராணுவ மேஜரை திருமணம் செய்து கொண்டு ஒரு உளவாளியாக இந்திய ராணுவத்திற்கு அவர் தகவல் அனுப்பி வைப்பது குறித்து சிவாஜிக்கு உண்மை தெரியும். ஆனால் சாவித்திரி உளவாளி என்ற விஷயம் சாவித்திரியின் கணவருக்கு தெரிந்து விட அதன் பின் ஏற்படும் சோகமான முடிவு தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

raththa thilagam1

இந்த படம் கடந்த 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி வெளியானது. சிவாஜி கணேசன், சாவித்திரி ஆகிய இருவரின் நடிப்பு அற்புதமாக இருந்தாலும் இருவரும் ஜோடியாக இணைந்து நடிக்காதது மற்றும் சோகமான முடிவு காரணமாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறவில்லை.

தேச பற்றா……? கதாபாத்திரமா…..? தியாகம் செய்த சிவாஜி….. எதற்காக தெரியுமா…..!!

இருப்பினும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் அடையாமல் இந்த படம் காப்பாற்றியது. இந்த படத்தை பஞ்சு அருணாசலம், கிருஷ்ணன் மற்றும் கண்ணதாசன் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருந்தனர். திரைக்கதை மட்டும் கொஞ்சம் நன்றாக அமைந்திருந்தால் சீனாவின் போரை ஒட்டி வந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews